Wednesday, November 27, 2013

மக்களுக்காக 30 வருடங்கள் வேண்டுமானாலும் சிறைவாசம் அனுபவிக்க தயார்: சரத் பொன்சேகா

மக்களுக்காக மேலும் 20 முதல் 30 வருடங்கள் வேண்டுமானாலும் சிறைவாசம் அனுபவிக்க தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.
தொடன்கொட துடாகல பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் பொழுதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகள், பேச்சுரிமை, கருத்து கூறும் உரிமை ஆகிய உரிமைகள் மக்களுக்கு இல்லாமல் போயுள்ளன.

இந்த நிலைமையில் இருந்து மக்கள் மீட்கும் நோக்கத்தில் நாங்கள் எமது அரசியல் சக்தியை கட்டியெழுப்பினோம். இதற்காக நாங்கள் பெரும் அர்ப்பணிப்புகளை செய்துள்ளோம்.

பிரதான அரசியல் தலைவர்கள் என்று தம்மை கூறிக்கொள்பவர்கள் நாட்டுக்காக எதனையும் செய்யவில்லை.

பிரதான அரசியல் தலைவர்கள் என்றுக் கூறிக்கொள்ளும் தலைவர்களின் கட்சிகளுடன் இணைந்து அரசியலில் ஈடுபட்டால் நாமும் மக்களை ஏமாற்ற நேரிடும்.

மக்களுக்கு பொய்களை கூறும் ஏமாற்றும் அரசியல் எங்களுக்கு தெரியாது. இதன் காரணமாகவே நாங்கள் புதிய கட்சி, புதிய சின்னத்துடன் எமது அரசியல் பயணத்தை ஆரம்பித்தோம். எந்த தடைகள் வந்தாலும் நாங்கள் எங்களது இந்த பயணத்தை நிறுத்த போவதில்லை.

மேலும் 20 முதல் 30 வருடங்கள் வரை கூட நான் சிறைவாசம் அனுபவிக்க தயாராகவே இருக்கின்றேன். எனக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.
எனது பிள்ளைகளையும் பழிவாங்கினர். எனது மூத்த மகளின் கணவரை நான்கு வருடங்களாக காணவில்லை என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com