கிழக்குக் சீனா மற்றும் வடக்கு சீனாவின் கடற்பகுதியில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மூழ்கியதில் மூவர் பலியாகியுள்ளதுடன் 25 பேர் மாயமாகியுள்ளனர்.
இது தொடர்பாக தெரியவருதாவது கிழக்குக் சீனா பகுதியில் இருந்து 15 மாலுமிகளுடன் புறப்பட்ட 88 மீட்டர் நீளமுடைய சரக்குக் கப்பல் ஒன்று நேற்று நள்ளிரவு 9 மணியளவில் மூழ்கியதில் 3 பேர் உயிரிழந்ததுடன் 12 மாலுமிகளை காணவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல் வடக்கு சீனாவின் கடலோர பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சரக்குப் கப்பல் ஒன்று மூழ்கியுள்ளதுடன் இந்த கப்பலில் பயணம் செய்த 14 மாலுமிகளின் கதி என்ன என்பது தொடர்பில் ஏதும் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமல்லாது இந்த இரண்டு விபத்துக்களும் பலத்த காற்றினால் ஏற்பட்ட பேரலைகளில் சிக்கி கடலில் மூழ்கியதாக கூறப்படுவதுடன் நீரில் மூழ்கி காணாமல் போன 25 பேரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கடலோர காவல் படை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment