பிராந்திய கடல் பாதுகாப்பு மாநாடு நவம்பர் 25 காலியில்!
பிராந்திய கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயும் ‘கோல் டயலொக் – 2013’ என்ற உயர் மட்ட மாநாடு எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி காலித் துறைமுக நகரில் ஆரம்பமாகிறது.
‘இந்து சமுத்திரத்தில் புதிதாக உருவாகும் கடல்சார் முறைமைகள்’ என்ற தொனிப் பொருளில் இரண்டு நாட்கள் இந்தமாநாடு நடைபெறவுள்ளது.
இலங்கை கடற்படை, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த உயர் மட்ட பாதுகாப்பு மாநாட்டை பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளதுடன் சிறப்புரையையும் நிகழ்த்தவுள்ளார்.
அது மட்டுமல்லாது இந்த மாநாட்டில் ஜனாதிபதியின் செயலாளர் திரு. லலித் வீரதுங்க விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
0 comments :
Post a Comment