2300 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஓவியம்!
அயர்லாந்தில் பிறந்து பிரிட்டனில் வசித்த பிரபல ஓவியர் வரைந்த ஓவியம் சுமார் 2300 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பிரபல ஓவியர் பிரன்சிஸ் பேகான் அவரது நண்பர் லுகியன்பிராடை 1969 ஆம் ஆண்டு மூன்று கோணங்களில் படம் வரைந்தார். மூன்று கோணங்களில் வரையப்பட்ட இந்த ஓவியம் ஓவியர் பேகானின் தலை சிறந்த ஓவியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த ஓவியம் ஏலம் விடுவதற்காக நியூயார்க் ஏல மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதிகபட்சமாக 85 மில்லியன் டொலருக்கு விற்கும் என்று எதிர்பார்க் கப்பட்ட இதன் தொகை, தொடக்கத்திலேயே 80-மில்லியன் டாலருக்கு கேட்கப் பட்டது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஏலம் தொடங்கிய 6 நிமிடத்திலேயே விற்கப்பட்ட இந்த ஓவியத்தின் மதிப்பு 142 மில்லியன் டொலர் ஆகும்.
இவ்வளவு தொகைகொடுத்து இந்த அபூர்வ ஓவியத்தை ஏலத்தில் வாங்கிய நபர் யார் என்னும் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதும், இந்த ஓவியமே உலகில் அதிகத்தொகைக்கு விற்கப்பட்ட ஓவியம் என்பதும் குறிப் பிடத்தக்கது.
0 comments :
Post a Comment