2000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து கடலில் விழுந்த பயணி..! விமானி அதிர்ச்சித்தகவல்!
மியாமி கடற்பகுதியில் பறந்துகொண்டிருந்த சிறுரக விமான த்தில் பயணம் செய்தவர் திடீரென விமானத்தின கதவை திறந்துகொண்டு கீழே, கடலில் விழுந்ததாக அமெரிக்க விமானி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை பிற்பகல் விமான போக்குவரத்து கட்டுப் பாட்டு அறைக்கு இந்த தகவல் வந்ததாகவும், அந்த அழைப்பு வந்தபோது விமானம் 2000 அடி உயரத்தில் பறந்து கொண் டிருந்ததாகவும், அமெரிக்காவின் மத்திய விமான போக்கு வரத்து நிர்வாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இத்தகவலையடுத்து தீயணைப்பு மற்றும் விமான மீட்புக் குழுவினரும், நீர்மூழ்கி குழுவினரும் அந்த விமானம் தரையிறங்கிய டாமியாமி நிர்வாக விமான நிலையம் அருகே கடலில் விழுந்த பயணியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் ரேடார் வசதி மற்றும் கட்டுப்பாட்டு கோபுரங்கள் மூலம் விமான போக்குவரத்து கட்டுப்பாடு ஒளிபரப்புகளை வழங்கும் வலைதளமும் இதனை உறுதி செய்துள்ளது. கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பைலட் பேசிய விவரங்களை அந்த வலைதளம் பதிவு செய்துள்ளது.
ஆனால் பைலட் கூறியது சரியான தகவல்தானா என்பதை கடலோர பொலிஸாரும், மீட்புக்குழு அதிகாரிகளும் உறுதி செய்யவில்லை. இதுபற்றி விசாரணை நடத்துவதற்காக மியாமி-டாடே பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளது.
0 comments :
Post a Comment