Thursday, November 21, 2013

விசேட அதிரடிப்படை அதிகாரி கொலை!! கொலையை மறைக்க 20 இலட்சம் ரூபா இலஞ்சமாக பெற்ற பொலிஸ் OIC கைது!

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் அதிகாரி ஒருவரின் படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணை களை முடக்கவும், சாட்சியின் உண்மைகளை மறைக்கும் பொருட்டும் கோடீஸ்வர பெண் ஒருவரிடமிருந்து 20 இல ட்சம் ரூபா பணத்தை பலாத்காரமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் தலங்கம பொலிஸ் நிலைய பொ றுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதற்கமைய, தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் பெரேரா, தலங்கம குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கொடிகார, சார்ஜன்ட் புஷ்பகுமார மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் நவரட்ன ஆகிய நால்வரே நேற்றுக் காலை கைது செய்யப்பட்டு ள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு பொலிஸ் தலை மையகத்திலுள்ள பொலிஸ் பேச்சாளர் அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

இது தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில், தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 20 இலட்சம் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே பொலிஸ் மா அதிபரின் உத்தரவு என்றும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தலங்கம பொலிஸ் பிரிவிலுள்ள பெலவத்த விசேட அதிரடிப் படையில் சேவையாற்றி இடை நிறுத்தப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் துசிதகுமார என்பவர் கடந்த ஜூலை மாதம் 21ம் திகதி கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போன நிலையில் 28ம் திகதி கித்துல்கல பிரதேசத்தில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தலங்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித் ததுடன், கொலை செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரியின் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணும் அவரது வாகன சாரதியும் துமித குமார தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே வீட்டிலிருந்து சென்று தலைமறைவாகியுள்ளதாக வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் தனக்கு சந்தேகம் உள்ள தாகவும், தலங்கம பொலிஸார் இது தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுக்க வில்லை என்றும் கொலை செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரி பொலிஸ் மா அதிபரின் நிவாரண பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனின் ஆலோசனைக்கமைய இந்த விசாரணை நடவடிக்கை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக் கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் கள்ளத் தொடர்பு மனைவியான கொள்ளுப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஹிமாலி கருணாரட்ன என்ற கோடீஸ்வர பெண் 15 இலட்சம் ரூபா பணத்தை கொடுத்து தனது கள்ளக் காதலனை கொலை செய்துள்ளமை தெரிய வந்ததை. அடுத்து சி.சி.டி.யினர் இம்மாதம் 7ம் திகதி குறித்த பெண், அவரது சாரதி, கொலையுடன் தொடர்புடைய கடுவல பிரதேசத்தைச் சேர்ந்த இருவரையும் கைது செய்து விசாரணைக்குட்படுத்தினர்.

கொலை செய்யப்பட்ட தனது கள்ளக் காதலனான முன்னாள் பொலிஸ் அதிகாரி தொடர்ச்சியாக பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததனாலேயே கொலை செய்வ தற்கு ஒப்பந்தம் கொடுத்ததாக கோடீஸ்வர பெண்மணி பொலிஸாரிடம் தெரிவித் துள்ளார். இதேவேளை தொடர்ச்சியாக குறித்த பெண்ணிடமும் அவரது சாரதியி டமும் சி.சி.டி.யினர் மேற்கொண்ட விசாரணையின் மூலம் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முடக்கவும் சாட்சிகளின் உண்மையை மறைப்பதற்கும் தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணம் கோரியதை அடுத்து 20 இலட்சம் ரூபா பணத்தை கொடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்படி தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு இலக்கத்திற்கு 20 இலட்சம் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பெண்ணிடம் பலாத்காரமாக பணத்தை பெற்ற தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு அதிகாரிகளையும் கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் வழங்கிய உத்தரவை அடுத்து நேற்றுக் காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment