கல்முனை தனியார் பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்த 2 கோடி ரூபா வழங்க கொரிய இணக்கம்
கல்முனை நகரில் அமைந்துள்ள தனியார் பஸ் நிலையத்தை சகல வசதிகளும் கொண்டதாக தவீனமயப்படுத்தும் திட்டத்திற்கு இரண்டு கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்வதாக கொரியா நாட்டின் கொய்கா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி பார்க் சூக் இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஆசிய மன்றத்தின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் அவர்களின் ஒருங்கிணைப்புடன் கொழும்பிலுள்ள கொரிய நாட்டு தூதரகத்தில் அமைந்துள்ள கொய்கா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்படி அபிவிருத்தி திட்டத்திற்கு உதவுவதற்கான இணக்கத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தச்சந்திப்பில் கல்முனை மாநகரப் பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பில் கொய்காவின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடியதுடன் உரையாடலின் இறுதியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை சாதகமாகப் பரிசீலிப்பதாக உறுதியளித்ததுடன் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி கல்முனை தனியார் பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்திற்கு இந்த ஆண்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதியளித்தார்.
0 comments :
Post a Comment