Wednesday, November 6, 2013

152 பேருக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது!

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற எல்லைக்காவல் படையி னரின் கலகத்தில் பங்குபற்றிய 152 பேருக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதனை விடவும் 157 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள துடன் 271 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த கலகத்தின் போது 74 சிவிலியன்கள் மற்றும் 57 இரா ணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த தண்டனைகள் இன்று செவ்வாய்க்கிழமையே வழங்கப்பட்டுள்ளது. ஷெய்க் ஹஸினா பிரதமராக பதவியேற்று இரண்டு மாதங்களிலேயே இந்த கலகம் நடந்தது.

கலகத்தில் ஈடுபட்ட எல்லைக்காவல் படையினரை தாக்குவதற்கு அரசாங்கம் அனுமதிக்காததால் இராணுவம் அதிருப்தியடைந்தது. இதனை தொடர்ந்து கலகக்காரர்களுக்கு பிரதமர் ஹஸினா வழங்கிய மன்னிப்பு இரத்துச் செய்யப்பட்டது.

பங்களாதேஷ் குற்றப்புலனாய்வு பிரிவினர் குற்றங்களை விசாரணை செய்து 850 பேருக்கு எதிராக குற்றப்பத்திரனை தாக்கல் செய்தனர். கூட்டமாக குற்றஞ்சாட்டி நடைபெற்ற நீதி விசாரணையை மனித உரிமை குழுக்கள் விமர்சித்தன. 47 சந்தேகநபர்கள் தடுப்பில் மரணித்ததாக இந்த குழுக்கள் கூறியிருந்தன.

சந்தேகநபர்களுக்கு சட்டவுரைஞர்களின் உதவி மறுக்கப்பட்டதெனவும், இவர்களு க்கு தம்மீதான குற்றச்சாட்டுதல்கள் தெரிந்திருக்கவில்லை எனவும் முன்வைக்கப் பட்ட விமர்சனங்களை பங்களாதேஷ் அதிகாரிகள் மறுத்துவருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com