Tuesday, November 19, 2013

121 இலங்கை மீனவர்கள் வெளிநாட்டு சிறைகளில் தடுத்துவைப்பு- கடற்றொழில் அமைச்சு!

இந்தியாவில் 107 மீனவர்களும், மியன்மாரில் 12 மீனவர்களும் மொரீசியஸில் இரண்டு மீனவர்களும் மியன்மாரில் 12 மீனவர்களும் என இலங்கை மீனவர்ககள் 121 பேர் தற்போது வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அது மட்டுமல்லாது இந்த மீனவர்களுடன் 24 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளதுடன் இவற்றில் 20 இந்திய அரசாங்கத்தின் பொறுப்பிலும் மியன்மார் மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகளில் தலா இரண்டு படகுகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிப்பதற்கு இராஜதந்திர மட்டத்திலான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com