கடந்த ஒருவருடத்தில் மட்டும் 1100 இலங்கையர்களை திருப்பி அனுப்பிய ஆவுஸ்திரேலியா!
சட்டத்துக்கு புறம்பாக கடல் மார்க்கமாக படகுகளில் அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியாவிற்கு சென்ற இலங்கையர்கள் 1100 பேரை, கடந்த ஒருவருடத்தில் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்காலத்திலும் சட்டத்துக்கு புறம்பான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் அகதிக் கோரிக்கையாளர்கள் எந்தவித தயவு தாட்சண்யங்களுமின்றி சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது.
கடந்த 10ஆம் திகதி சட்டத்துக்கு புறம்பான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 79 இலங்கையர்களை உடனடியாக திருப்பி அனுப்பியுள்ளதாகவும், 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையில் 1100க்கும் அதிகமானவர்களை திருப்பி அனுப்பியுள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கத்தை மேற்கொள்கட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்டத்துக்கு புறம்பான முறையில் ஆட்களைக் கடத்தும் நபர்களுக்கு பணத்தை வழங்கி அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் சந்தர்ப்பங்கள் எதிர்காலத்தில் சாத்தியமில்லை என்பதுடன் நீங்கள் படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா வந்தால் உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவீர்கள் என்கிற தொனியிலான அறிவித்தலை அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கையில் பிரசாரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment