கிளிநொச்சி நோக்கி பயணித்த பஸ் விபத்தில் 10 பெண்கள் படுகாயம்
நேற்றுக் காலை 7 மணியளவில் வட்டகச்சியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்து கொண்டிருந்த பஸ் வண்டி பன்னங்கண்டி பாலத்தடியில் விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 30 பெண்கள் பயணம் செய்த பஸ்வண்டியே விபத்துக்குள்ளானதுடன் விபத்தில் படுகாயமடைந்த 10 பெண்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment