Thursday, October 10, 2013

Facebook ற்க்கு இலங்கையில் முற்றுப்புள்ளி வைக்கப்பட மாட்டாது!

Facebook போன்ற சமூக வலைத்தளங்களை தடை செய்வது குறித்து அரசாங்கம் இதுவரை எதுவித முடிவுகள் எடுக்க வில்லை என தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் Facebook தடை செய்யப்படும் என பலர் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அரசா ங்கம் ஏதேனும் முடிவுகளை எடுத்துள்ளதா என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த தினேஷ் குணவர்த்தன, பரவும் வதந்திகளை நிராகரிப்பதாகவும் அரசாங்கம் இதுவரை அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனவும் கூறினார்.

எனினும் உலகின் மிக முக்கியமான சமூக வலைத்தளங்களில் ஒன்றான Facebook தொடர்பில் பாணந்துறை பிரதேச பாடசாலை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தார். Facebook ஓர் தொற்று நோயைப் போன்று பரவி வருவதாகவும் இதனால் பல்வேறு சமூக சீரழிவுகள் ஏற்படுவதாகவும் Facebookல் வரும் எதனையும் நம்ப வேண்டாம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com