Wednesday, October 30, 2013

CHOGM தொடர்பில் எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்களின் வன்முறைகள் உச்சகட்டம்! நாம் தமிழர் இயக்கத்தின் புலி ஆதரவாளர்கள் கைது!

இந்திய பிரதமர் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டுமென இகொனமிக்ஸ் டைம்ஸ் சஞ்சிகை வலியுறுத்தல்

இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷிட், பொது நலவாய மாநாட்டில் கலந்து கொள்வது, உறுதிப்படுத்தப் பட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்கள், வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். வன் முறைகளில் இவ்வாறு ஈடுபட்ட நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷிட், இலங்கையில் நடைபெற வுள்ள பொது நலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தியதை தொடர்ந்து, ஆத்திரமடைந்துள்ள நாம் தமிழர் இயக்கத்தின் புலி ஆதரவாளர்கள் சென்னையில் இரண்டு தபால் அலுவலகங்களை தீயிட்டு கொழுத்தியுள்ளன.

சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களுக்குள் அக்கட்சியின் சென்னை செயலாளர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அத்துடன் மேலும் மூவர் சரணடைந்துள்ளனர். பாதுகாப்பு கெமராக்களில் பதிவான காட்சிகளுடாக, சந்தேக நபர்கள் அடையாளங்காணப்பட்டதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து, சென்னையில் உள்ள இலங்கையின் துணை தூதுரகம் உட்பட ஏனைய முக்கிய நிறுவனங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளது.

இதேவேளை இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டுமென, இந்தியாவின் மற்றொரு சஞ்சிகையும் வலியுறுத்தி யுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே நிலவி வரும் நீண்டகால உறவுகளை மேலும் பலப்படுத்த வேண்டியிருந்தால், இந்திய பிரதமர் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டுமென, இந்தியாவின் இகொனமிக்ஸ் டைம்ஸ் சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.

முழு இந்தியாவும், இலங்கையின் வட மாகாண சபை தேர்தலை, மிக அவதானத்துடன் நோக்கி வந்தது. அது மிக நியாயமான முறையில் நடாத்தப்பட்டு, தமிழ் மக்களின் பிரதிநிதிகளை நியமிப்பதற்கு தேவையான சூழலை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்தது, இது ஒரு சிறந்த முன்மாதிரியாகும். இந்தியா, இது குறித்து கவனம் செலுத்த வேண்டுமென்றும், சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு முன்னரும், ஹிந்து பத்திரிகை மூலமும், இந்திய பிரதமரின் பங்களிப்பு அவசியமென, தெரிவித்துள்ளது.

1 comments :

Anonymous ,  October 31, 2013 at 2:31 AM  


கள்ள நோக்குடைய தமிழக அரசியல் கோமாளிளும், புலிபினாமி கிரிமிகளும் தங்களின் சுயநலன்களுக்காக அறிவுகெட்ட தமிழக வானரங்களை ஏவிவிட்டு, அமைதிக்கு பங்கம் விளைவித்து மீண்டுமொருமுறை ஈழத்தமிழ் மக்களுக்கு அழிவை தேடுவது மட்டுமல்ல, அதில் தங்களுக்கு மேலும் இலாபங்களை தேடலாம் என நினைக்கிறார்கள்.

ஆடுகள் நனைகிறது என்று ஓநாய்கள் கவலையடைகிறது என்ற கதை தான் இது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com