எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்களுக்கு தகுந்த பதிலை கொடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்! CHOGM தொடர்பிலான வழக்கு தள்ளுபடி!
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க கூடாதென கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அனுதாபம் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் இவ்வாறான தடை களை விதிக்கவோ இந்திய வெளிநாட்டு கொள்கையில் தலை யிட முடியாதெனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஆர்.கே.அகர்வால் மற்றும் நீதிபதி சந்தியநாராயணன் ஆகியோர் இத்தீர்ப்பை வழங்கினர்.
இந்தியாவை சேர்ந்த பேராசிரியரான சரஸ்வதி கோவிந்தராஜ் தாக்கல் செய்த வழக்கே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் தமிழர்க ளுக்கு அநீதிகளை இழைத்து வருவதாகவும் அத்துடன் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் எனும் பேராசிரியர் கோவிந்தராஜ் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்த நிலையிலேயே நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பு வழங்கினர்.
அனுதாபம் உணர்ச்சிகளின் அடிப்படையில் இவ்வாறான தடையொன்றை விதிக்க முடியாதெனவும் நீதிபதிகள் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment