Friday, October 18, 2013

ஈரான் அணுசக்தி திட்டம் குறித்த சர்வதேசப் பேச்சுக்கள் தொடங்குகின்றன. By Peter Symonds

ஜெனீவாவில் ஈரானுக்கும் P5+1 குழு என அழைக்கப்படும் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜேர்மனிக்கும் இடையே ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்து பேச்சுக்கள் ஆரம்பிக்கவுள்ளன. புதிய ஈரானிய ஜனாதிபதி ஹசான் ருஹானி கடந்த மாதம் ஐ.நா.வில் பேசுகையில் திருப்புமுனை குறித்த எதிர்ப்பார்ப்புக்கள் எழுந்தன அமெரிக்கா ஏற்கனவே பேச்சுக்கள் நடப்பதற்கு முக்கிய ஈரானிய சலுகைகளை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது.

ஞாயிறன்று வெளியுறவுச் செயலர் ஜோன் கெர்ரி அமெரிக்க கோரிக்கைகளை சந்திக்காத எந்த உடன்பாடும் நிராகரிக்கப்படும் என்றும் “மோசமான உடன்பாட்டை விட உடன்பாடு இல்லை என்பது சிறந்தது” என்றும் அறிவித்தார். அமெரிக்க இஸ்ரேல் பொது விவகாரங்கள் குழுவான (AIPAC) இஸ்ரேலிய சார்பு செல்வாக்குக் குழுவிற்கு தொலைக்காட்சி மூலம் அவர் பேசினார்; இது இஸ்ரேலிய அரசாங்கம் போல் கடுமையாக தெஹ்ரானுடன் சமரசம் கூடாது என எதிர்க்கிறது.

AIPAC கூட்டத்தில் கெர்ரி கூறினார்: “இப்பொழுது இராஜதந்திர சன்னல் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்கள் கண்களும் நன்கு திறந்துள்ளன என்பதை உங்களுக்கு நான் கூறுகிறேன்.... ஈரானின் அணுத்திட்டம் குறித்து சமாதானமான தீர்வை நாம் நாடுகையில், செயல்கள் சொற்களுக்கு ஈடாக வரவேண்டும்.”

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமெரிக்கா ஆதாரமற்ற கூற்றுக்களான ஈரான் அணுவாயுதத்தை தயாரிக்க முற்படுகிறது என்பதை ஒரு போலிக் காரணமாகப் பயன்படுத்தி ஈரானை இராஜதந்திர முறையிலும் பொருளாதார அளவிலும் தனிமைப்படுத்துகிறது, மேலும் இராணுவத் தாக்குதல் என்னும் அச்சுறுத்தலையும் கொடுக்கிறது. ஒபாமா நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கத் தலைமையிலான பொருளாதாரத் தடைகள் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளை பாதியாகச் செய்துவிட்டது, நாட்டை உலக வங்கி நிதிய முறைகளிலிருந்து ஒதுக்கியுள்ளது. ஈரானிய தலைவர்கள் பலமுறையும் அணுவாயுதக் கிடங்கை கட்டமைப்பதை மறுத்து வந்துள்ளனர்.

AIPAC க்கு கெர்ரியின் கருத்துக்கள் மேற்கத்தைய செய்தி ஊடகத்தில் பல வர்ணனைகளில் எதிரொலித்துள்ளன. வாஷிங்டன் போஸ்ட்டின் தலையங்கம் ஒன்று “ஈரானின் ஆயுதக்களைவு பற்றிய உறுதிப்பாடு பொருளாதார தடைகள் அகற்றப்படுமுன் சோதிக்கப்பட வேண்டும்” எனக் கூறியது. இதேபோல் பைனான்சியல் டைம்ஸின் தலையங்கமும் “ஈரான் இப்பொழுது நேர்மையைக் காட்ட வேண்டும்” எதிர்பார்ப்புக்களை குறைக்கும் வகையில் “திரு. ருஹானி குறித்த மேற்கத்தைய பரபரப்பு அதிகமாகவே போய்விட்டது” என எழுதியது.

நேற்று பத்து ஜனநாயக மற்றும் குடியரசு செனட்டர்கள் ஒபாமாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியதுடன் பேச்சுக்கள் “தடைக்குத் தடை” உடன்பாடு ஒன்றைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அதன்படி ஈரான் அனைத்து யுரேனிய அடர்த்தியையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதற்கு ஈடாக வாஷிங்டன் ஈரான் மீது அனைத்துப் பொருளாதார தடைகளையும் நிறுத்தி வைக்கும் என்றும் அமெரிக்க காங்கிரசில் பரிசீலனையிலிருக்கும் புதிய அபராதங்கள் இதில் சேராது என்றும் கூறப்பட்டுள்ளது. செனட்டர்கள் அமெரிக்க “நம்பகத்தன்மையுடைய இராணுவ அச்சுறுத்தலை” தொடர வேண்டும், அதாவது அதன் இராணுவப் படைகளை நிலைகொள்ளச் செய்து ஈரானை தாக்கத் தயாராக இருக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போதைய தேக்கத்தை முடிக்க தன்னுடைய திட்டங்களை இன்றைய பேச்சுக்களில் அளிக்கும் பொறுப்பை ஈரானிய தூதுக்குழுவிடம் ஒபாமா நிர்வாகம் ஏற்கனவே அளித்துள்ளது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் என்ன கோரும் என்பது கடந்த தோற்ற சுற்றான P5+1 பேச்சுக்களில், ஏப்ரல் மாதம் காஜகஸ்தானில் நடைபெற்றதில் முன்வைத்த அவற்றின் கோரிக்கையில் குறிப்பாகியுள்ளது. ஈரானில் 20% யுரேனிய அடர்த்தியை நிறுத்திவைக்கும் திட்டம் ஒன்றை, “நம்பிக்கையை உருவாக்கும்” திட்டமாக ஈரான் கொடுக்க வேண்டும், இருக்கும் யுரேனிய 20% அடர்த்தியை நாட்டிலிருந்து வெளியே அகற்ற வேண்டும், மற்றும் போர்டோ (Fordow) அடர்த்தி ஆலை மூடப்பட வேண்டும். அமெரிக்கா இத்திட்டத்தை இடைக்கால நடவடிக்கையாக அனைத்து ஈரானிய அடர்த்தி ஆலைகள் மூடப்படுவதற்குமுன் தேவை எனக்கோரியது; அதேபோல் அரக்கில் இருக்கும் கன நீர் உலைக்கூடம், அடுத்த ஆண்டு முடிக்கப்பட உள்ளதும் மூடப்பட வேண்டும், இதைத்தவிர அதன் அணுத் திட்டங்கள் முழுவதும் ஐ.நா.வின் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அணுசக்தி பரவா உடன்படிக்கையின் கீழ் தனக்குள்ள உரிமைகளை ஈரான் சமாதான நோக்கங்களுக்காக அணுசக்தி எரிபொருளின் அனைத்துக் கூறுபாடுகளும் பயன்படுத்தப்படும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. தற்போதுள்ள எரிபொருள் உலைக்கூடம் புஷேஹ் மற்றும் வருங்கால ஆலைகளின் செயற்பாட்டிற்காக நடன்ஸ் (Natanz) அடர்த்தி ஆலை 3.5% அடர்த்தி யுரேனியத்தை உற்பத்தி செய்யும். அதன் 20% அடர்த்தி யுரேனியத்தின் பாதிக்கும் மேல் எரிபொருள் தட்டுக்காக (fuel plates) தெஹ்ரான் ஆய்வு உலைக்கூடத்தில் மாற்றப்பட்டுள்ளன, அந்த உலைக்கூடம் மருத்துவ ஐசோடெப்புக்களை (ஓரகத் தனிமங்களை) உற்பத்தி செய்கிறது. சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) வாடிக்கையாக ஈரானின் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்கிறது; இந்நாட்டில் யுரேனியம் 90% அடர்த்தி செய்யப்படுவதில்லை, அதாவது ஆயுதங்கள் செய்யக்கூடிய தரத்திற்கு என்றும் கூறியுள்ளது.

இன்றைய P5+1 பேச்சுக்கள், ஓர் இடைக்காலத் திட்டத்தை மட்டும் பரிசீலிக்காது, ஒரு “முடிவை” காணும்; அதாவது இரு கட்சிகளும் எவ்வளவு விட்டுக்கொடுக்கத் தயார் என்பதையுமாகும். அமெரிக்காவை பொறுத்தவரை, இது அதிகம் அல்ல. ஒபாமாவின் தேசிய பாதுகாப்புக் குழுவின் முன்னாள் அதிகாரி காரி சமோர் நியூ யோர்க் டைம்ஸிடம் கூறினார்: “அமெரிக்கா ஈரானின் மொத்த அடர்த்திக்கு வரம்பு கட்டும் உடன்பாட்டை எதிர்பார்க்கிறது, இது குறைந்த அளவு அடர்ந்து செய்யப்பட்ட யுரேனிய வகைகளின் மைய விலக்கு (centrifuges) மற்றும் மொத்தம் எண்ணிக்கையை பொறுத்தவரை வரையறுக்கப்படும். இதற்கு ஈடாக கணிசமான பொருளாதாரத் தடைகள் நீக்கம் இருக்கும்.”

ஞாயிறன்று அரச தொலைக்காட்சியில் பேசுகையில் ஈரானின் அணுச்சக்தி பேச்சு நடத்துபவரான அப்பாஸ் அரக்சி தன்னுடைய நாடு யுரேனிய அடர்த்தி உரிமையை விட்டுக்கொடுக்காது என்றும் இருக்கும் சேமிப்புக்கள் நாட்டை விட்டு அகற்றப்பட அனுமதிக்காது என்றும் கூறினார். “அடர்த்தியாக்கல் செய்வதும் யுரேனியத்தை வெளியே அனுப்புவதும் எங்களுக்கு சிவப்புக் கோடுகள். எங்கள் உரிமைகள் எதையும் ஒருபொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டோம், இவை சர்வதேச உடன்பாடுகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன” என்றார்.

ஈரானின் அதிஉயர் தலைவர் அயோதொல்லா அலி காமெனீ, வெளியுறவு, பாதுகாப்பு விவகாரங்களில் இறுதி முடிவு எடுப்பவர், ஜனாதிபதி ரௌஹணியின் இராஜதந்திர முன்முயற்சிகளுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவைக் கொடுத்துள்ளார். இவை பொருளாதாரத் தடைகளை நீக்கும் வழிவகையாக காணப்படுகின்றன, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முடிவு கட்டி சமூக அமைதியின்மையையும் தவிர்க்கும். அரக்சியின் கருத்துக்கள் காமேனீ சலுகைகள் மீது கடுமையான வரம்புகளை வைத்துள்ளார் என்பதைத்தான் பிரதிபலிக்கின்றன.

கடந்த தசாப்தம் முழுவதும் அணுப் பேச்சுக்களில் ஈரானின் கடுமையான அனுபவங்கள் பற்றி ருஹானிக்கே நன்கு தெரியும். 2003 க்கும் 2005 க்கும் இடையே யுரேனிய அடர்த்தித் திட்டத்தை ஈரான் நிறுத்தி இன்னும் கூடுதலான IAEA ஆய்வுகளை அனுமதித்து, எதிர் அளிப்பு விரிவாகத் தயாரிக்கப்பட்டபோது அவர்தான் வாஷிங்டனின் ஐரோப்பிய நட்பு நாடுகளிடம் முக்கிய அணுப் பேச்சுக்களை ஈரான் சார்பில் நடத்தினார். ஐரோப்பிய தொகுப்பு இறுதியில் அறிவிக்கப்பட்டபோது, ஈரான் அதன் அணு நிலையங்களை மூடுவதற்கு ஈடாக, தெளிவற்ற உறுதிமொழிகளைத்தான் கொடுத்திருந்தது. ஈரானியப் பேச்சு நடத்துபவர் ஒருவர் திட்டத்தை “இழிந்தது, அளிப்பு என்றே கூறுவதற்கில்லை” என்றார்.

அப்பேச்சுக்களின் விதி, அமெரிக்கா ஈரானின் அணுத் திட்டங்களை எப்பொழுதும் ஒரு வசதியான காரணமாக அதன் தெஹ்ரானில் ஆட்சி மாற்ற நோக்கத்தை தொடரப் பயன்படுத்தியுள்ளது என்பதைத்தான் அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. அமெரிக்கா ஒருபொழுதும் தன்னுடைய கூட்டாளியான ஷா ரேசா பஹ்லவி 1979 ஈரானியப் புரட்சியில் அகற்றப்பட்டதை ஏற்கவில்லை. கடந்த மூன்று தசாப்தங்களாக தெஹ்ரான் பலமுறையும் வாஷிங்டனுடன் சமாதானத்தை நாடியுள்ளது; அமெரிக்காவோ தொடர்ந்து ஈரானிய ஆட்சியை தன்னுடைய பொருளாதார, மூலோபாய விழைவுகள் மத்திய கிழக்கில் இருப்பதற்கு முக்கிய தடையாகத்தான் கருதுகிறது.

ஜெனீவாவில் அடுத்த இரு நாட்களில் பேச்சுக்களில் உடனடி முடிவு எப்படி இருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் இரக்கமற்ற முறையில் அதன் நோக்கமான எரிசக்தி செழிப்புடைய பிராந்தியத்தில் அதனுடைய தடையற்ற மேலாதிக்கத்தை நிறுவுதலைத் தொடரும். ஒபாமா நிர்வாகம் ஒரு மாதத்திற்கு முன்புதான் ஈரானின் நட்பு நாடான சிரியாவிற்கு எதிராக பேரழிவு தரும் விமானத் தாக்குதல்களை நடத்தும் கட்டத்தில் இருந்தது; இது சந்தேகத்திற்கு இடமின்றி அவசரத் திட்டங்களான, ஈரானுடன் அது போரில் ஈடுபட்டால் என்பதையும் கொண்டிருந்தது. பேச்சுக்கள் தொடர்கையில், அமெரிக்கா இரு நாடுகளுக்கும் எதிரான அதன் “நம்பகத்தன்மையுடைய இராணுவ அச்சுறுத்தலை” தக்க வைத்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com