முதலமைச்சருக்கு வரலாறு தெரியாதாம்: கேட்டு தெரிந்து கொள்ளச் சொல்கிறார்! அரியம் எம்.பி
வரலாறு தெரியா விட்டால் யாழ் பாராளுமன்ற உறுப் பினரிடம் கேட்டு முதலமைச்சர் தெரிந்திருக்க வேண்டும் என அரியநேந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபையின் கன்னி அமர்வு இன்று இடம்பெற்ற போது அங்கு உரையாற்றிய முதலமைச்சர் விக்கினேஸ் வரன் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள குடியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவித்தது தொடர்பில், தனது முகப்புத்தக நண்பர்கள் "தமிழ் மக்கள் பல பிரதேசங்களில் குடியமர்தப்படவில்லை, நிலம் அபகரிக்கப்படுகிறது முதலமைச்சர் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையே" எனக் கேட்டதற்கு பதில் அளிக்கையிலேயே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை குடியமர்த்தப்படாமைக்கான காரணம் அரசாங்கமும், அரசில் ஒட்டியிருக்கும் றிசாட் பதியூதீன் அமைச்சருமேயன்றி வேறுயாருமில்லை. வடமாகாண சபை ஆரமபிக்கப்படும் வரை அரசாங்கம் ஏன் முஸ்லிம் மக்களை ஏற்கனவே குடியமர்த்த வில்லை என்பதை வடமாகாண முதலமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும்.
சிலவேளை முதலமைச்சருக்கு வரலாறு தெரியாவிட்டால் வரலாறு தெரிந்த யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டு அறியலாம். வடமாகாண தமிழ் மக்கள் பல இடங்களில் இடம்பெயர்ந்து சொல்லொண்ணா துன்பத்தில் மரநிழலிலும் கூடாரங்களிலும் அவல வாழ்கையை வாழ்கின்றனர். இவர்களின் கண்ணீரையும் போக்கவும், உரிமை கிடைப்பதற்கான இராஜதந்திர வழி முறைகளை வடமாகாணசபை ஆற்றுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்
4 comments :
TNA is a drama Committee. you say this, i says this, sampanthar says this, Sumanthran say this, Mandayaan say this, Kasi ananthan vadakkaththa porukki say this, Seeman porukki say this,Vaiko porukki say this,Nedu maran poruki say this so every Tamil politiciens can say - what thay want untill NeXT Provinsen Election and past the there period.
Many Sri Lankans knows,what thay will do for Sri Lankan Tamils : Only 0000000000000000000000!!!!!
Unakkum peppe - unda appanukkum peppe!!!!!
ARIYAN..........GRADE-8, MAADDUKU OOZI PODUM PUNDIYANDI IS GOING TO TEACH DR. VIKINESWARAN
OH MY GOD......
இலங்கை தமிழர்களை பொறுத்தளவில் ஒன்றுபட்ட இலங்கை நாட்டுக்குள், கௌரவமான உரிமைகளுடனான ஒரு மாநில சுய ஆட்சியை தான் விரும்புகின்றனர். ஆகவே தான் பிரதம நீதியரசர் விக்கினேஸ்வரனை முதல்வராக தெரிவு செய்தார்கள். மற்றும் தமிழ் கூட்டணியையும் தெரிவு செய்தார்கள்
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை கௌரவ முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் கூட்டணி உறுப்பினர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து முழு மனதுடன் செயல்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் மக்கள் இருக்கிறார்கள்,
திறமை, தராதரம், அனுபவம் மற்றும் பொதுநலம் கொண்ட எமது கௌரவ முதலமைச்சர் நிச்சயமாக அரசியல் சாக்கடைக்குள் விழ மாட்டார். அவரை எவரும் விழுத்தவும் முடியாது.
அவரின் பாதை என்றும் நேர்மை, நீதியானதுடன் யதார்த்தமானதும் கூட. அவருக்கு தேவை அமைதியான, ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு மட்டுமே.
எதையுமே ஒரு இரவில் முடித்து விட முடியாது. எனவே நல்ல சிந்தனை, பொறுமை, நிதானமாக காய்களை நகர்த்த வேண்டும். இனி வரும் காலங்களில் இலங்கையில் சதுரங்க அரசியல் மட்டுமே வெற்றி பெரும். சாக்கடை அரசியல் அல்ல.
சிந்திக்கும் ஈழத்தமிழ் மக்களின் ஆதரவு இனிமேல் ஆக்கபூர்வமான சதுரங்க அரசியலுக்கு மட்டுமே.
The voters elected these type of guys to the parliament are to be ashmed.Hope they would not make the mistakes in future.it is the fate of of the tamil people to meet these guys.
Post a Comment