சிறைக்கூடங்களை நடாத்திச் செல்வதற்கும் பணமில்லை. போகம்பரையில் மின்சாரத் துண்டிப்பு!
இலங்கையிலுள்ள பிரதான சிறைக்கூடங்கள் பலவற்றில் செலுத்த வேண்டிய மீதிப் பணம் செலுத்தப்படாமல் இருப்பதனால், தேவையான உணவு, நீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அவசியத் தேவைகளை வழங்கும் தனியார் நிறுவனங்கள் அவற்றைத் தொடர்ந்து வழங்காமல் இடைநிறுத்தியுள்ளதால், அச்சிறைக்கூடங் கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது என்பதை சிறைக்கூட வட்டாரங்களி லிருந்து செய்திகள் ஊர்ஜிதம் செய்கின்றன.
போகம்பர சிறைச்சாலையில் மட்டும் நீர், மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள் பட்டியல்களின் செலுத்த வேண்டிய தொகை ரூபா 3 கோடி 46 இலட்சத்தை எட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
2000 இற்கும் அதிகமாக சிறைக்கைதிகள் உள்ள போகம்பர சிறைச்சாலையின் மின்சாரப் பட்டியலில் செலுத்த வேண்டிய தொகை 13 இலட்சத்தை எட்டியுள்ளது. நீருக்கான செலுத்த வேண்டிய தொகை 18 இலட்சமாகவும், எரிபொருளுக்கான கட்டணம் 15 இலட்சம் ரூபாவாகவும், உணவுக்கான செலுத்த வேண்டிய பட்டியல் தொகை ரூபா 3 கோடியை எட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அதேவேளை, தங்கல்ல, மொனராகல மற்றும் பதுளை சிறைச்சாலைகளுக்கும் உணவு மற்றும் எரிபொருள் வழங்குவதை நிறுத்துவதற்கு ஒப்பந்தக்கார்ர்கள் முடிவுசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது எனவு செய்திகள் நம்பகத் தன்மை வாய்ந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
(கேஎப்)
0 comments :
Post a Comment