ஏமாற்றிப் பிழைப்போருக்கு அதிகாரமும் கிடைத்தால் எப்படியிருக்கும்? - அருண் தம்பிமுத்து
இறுதி யுத்தத்திலும், கடந்த முப்பது வருடங்களாகவும் மக்கள் அழிவுகளைச் சந்தித்தபோது சிந்திக்காது வாய்மூடி மௌனம் காத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது காணியும் பொலிஸ் தேவை என்ற கூறுவது மிகவும் நகைப்புக்குரியது. இதனை மக்கள் மிகவும் ஆழமாக அறிந்து கொள்ளவேண்டும் என சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புத் தொகுதியின் அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்
இதுவரைக்கும் மக்களை ஏமாற்றிப் பிழைத்தது போல்தான் இந்த அதிகாரங்கள் கிடைத்ததும் மக்களை மேலும் ஏமாற்றிப் பிழைப்பார்கள் என்பதில் எதுவித ஐயமுமில்லை என தெரிவித்த அவர் '1949 இந்திய பாகிஸ்தான் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது எனவும் இவ் ஒப்பந்தத்தினால் இலங்கையில் மலையக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்கள் எனவும் 1950 – 1951 காலப்பகுதியில் இலங்கை நாட்டில் பரவலாக பல்லின மக்களும் குடியேற்றப்பட்டார்கள். இதில் மட்டக்களப்பு மாவட்டம் அம்பாறை, மட்டக்களப்பு என இரண்டாகத் துண்டாடப்பட்டன என தெரிவித்துள்ளார்
1956 ஆம் ஆண்டு சிங்கள மொழிச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. 1965 இல் சிறிமா - சாஸ்த்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதனால் மீண்டும் மலையக மக்கள் பாதிக்கப்பட்டார்கள். 1972 இல் தரப்படுத்தல் நடைபெற்றது. இதில் மட்டும்தான் யாழ். மாவட்டம் பாதிக்கப்பட்டிருந்தது. இவற்றுள் வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்கள் பாதிப்படையவில்லை. இவைகள னைத்தையும் வைத்துப் பார்க்கின்ற போது 1949 இல் இருந்து 1972 வரைக்கும் பல்வேறுபட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
1949 இல் ஆயுதம் ஏந்தாதவர்கள் 1972 இல் ஆயுதம் ஏந்தினார்கள். சரியான தலைமைத்துவம் கொண்டவர்கள் என்றால் ஆரம்பத்திலேயே ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டும் அல்லவா? இது இவ்வாறு இருந்தாலும் 1987 இல் வடகிழக்கு இணைந்திருந்தது. அப்போது காணி பொலிஸ் அதிகாரங்களை கேட்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்போது வடகிழக்கு பிரிந்தவுடன் தமக்கு காணி பொலிஸ் அதிகாரங்களைக் கேட்டு கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.
ஏற்கனவே கிழக்கில் 48 வீதமிருந்த தமிழ் மக்கள் 1987 காலப் பகுதியில் கிழக்கில் 44 வீதமானார்கள். ஆனால் தற்போது அறிக்கைகளில் 39 வீதமுள்ளதாக கணிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. இருந்தாலும் கிழக்கில் தற்போது 34 வீதம்தான் தமிழ் மக்கள் உள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment