Thursday, October 17, 2013

வன்முறையான கடந்த காலத்தை விட்டு தெளிவான விலகல். கொந்தளிப்பான காலத்திற்குள் மக்களை தள்ளக் கூடாது. விக்கி

சிறிதரனுக்கு எச்சரிக்கையா அல்லது ஆலோசனையா?

எல்ரிரிஈ-யின் கடந்த கால வன்முறை வழிக்கு முதுகைக் காட்டிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் கடந்த வெள்ளிக் கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம் பெற்ற பெரும் பாலான இலங்கை தமிழரசுக் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்ச்சியில் பேசும் போது, அவர்கள் தங்கள் மக்களை மீண்டும் கொந்தளிப்பான வன்முறையில் தள்ளிவிடக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இப்பொழுது வன்முறைக் காலத்தைக் கடந்து வந்து விட்டோம். நமது மக்கள் எல்லோரும் நமது அடிமைப் பெண்’கள் என்ற நினைப்பில் நாம் ஆயுதப் பலத்தோடு, வாழ்ந்தோம். அந்த காலம் கடந்து போன காலம் என்று நாங்கள் ஒவ்வொருவரும் மனதில் இருத்திக்’ கொள்ள வேண்டும் என்று அவர் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளார்.

1 comments :

Anonymous ,  October 17, 2013 at 6:04 PM  

Hope he would lead the society to peace humility and prosperity.Further
we hope that he would give his first preference to humanism.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com