Saturday, October 12, 2013

அம்பலமான சுரேஸ் பிரேமச்சந்திரனின் கோழிப்பண்ணை மோசடியின் எதிரொலி! ரிஆர்ரி யின் அசிங்கம் ஆதங்கப்படுகிறார் சிறிக்குமரன்!!

சுரேஸ் பிரேமச்சந்திரன் - ரிஆர்ரி கூட்டு வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் பெயரால் புலம்பெயர் தேசமெங்கும் நிதி வசூலிப்பு செய்து மாட்டிக்கொண்டது. புலிகளின் முன்னாள் உறுப்பினரான அங்கவீனர் ஒருவருக்கு கோழிப்பண்ணை அமைத்துக்கொடுப்பதாக மக்களிடம் அறவிட்ட பணம் எவ்வாறு சுருட்டப்பட்டது என்பது தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜேர்மனியை சேர்ந்த சிறிக்குமரன் என்பவரின் உதவியுடன் இலங்கைநெட் உண்மைக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருந்தது. இந்த மோசடிக்கும்பலின் முகத்திரை கிழிக்பட்டதை சகித்துக்கொள்ள முடியாத ரிஆர்ரி வானொலியினர் தனிமனிதனான சிறிக்குமரன் மீது வசைபாடவும் அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கவும் ஆரம்பித்துள்ளனர்.

மக்களின் பணத்துக்காக தங்களுக்குள்ளளேயே அடிபட்டுக்கொள்ளும் புலிப்பினாமிகளின் முகத்திரையை ஆதாரங்களுடன் மேலும் அம்பலத்திற்கு கொண்டுவருகின்றார் சிறிக்குமரன். இங்கே பதிவேற்றப்படுகின்ற வாக்கியங்கள் மனித நாகரிகத்திற்கு அப்பாற்றபட்ட வன்சொற்கள் மற்றும் தகாத வார்த்தை பிரயோகங்களாக இருக்கின்றபோதும் புலம்பெயர் தேசத்திலே வன்னி மக்களின் பெயரால் எவ்வாறான வயிற்றுப்பிழைப்பு நடக்கின்றது என்பதை மக்கள் அறியவேண்டும் என்பதற்காக சிறிக்குமரனின் ஆதங்கம் எவ்வித தணிக்கையுமின்றி பிரசுரமாகின்றது.

அன்பார்ந்த உறவுகளுக்கு சிறிக்குமரன் ஆகிய நான் தெரிவிப்பது யாதெனின் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் உறவுகளை நான் மனமார வாழ்த்துகின்றேன். வணங்குகின்றேன்.



ஆனால் உறவுகளின் பெயர்களை பயன்படுத்தி அவர்களது வறுமைமையையும் கண்ணீரையும் உலகிற்கு வெளிக்கெணர்வதன் மூலம் கிடைக்கும் பணத்தினை ஒரு சில தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களும் ரி.ஆர்.ரி வானொலியும் கையாடல் செய்வதென்பது தான் வேதனையான விடயம். இது பற்றி அண்மையில்வெளியான செய்தி ஒன்றுக்கு ரி.ஆர்.ரி வானொலியினர் தெரிவித்த கருத்து என்னவென்றால் தாங்கள் எதுவிதமான பணம் சேகரிப்பிலும் ஈடுபடுவதில்லை என்றும் மக்களது பணங்களை மக்களிடம் நேரடியாக உதவிசெய்பவர்களே கொடுக்கின்றார்கள் என்றும் இதற்கு தாங்கள் ஊடகமாகவே செயற்படுவதாகவும் தெரிவித்தனர்.



ஆனால் இவர்கள் கூறியது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதே. அவர்கள் அம்பலமான மோசடிகளை மறைப்பதற்காக தங்களது அழுக்குகளை என்மீPது பூசி தாங்கள் செய்த மோசடிகளை மறைப்பதற்காக என்னை அசிங்கப்படுத்துவதன் மூலம் தாங்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிப்பதற்காக உங்களது பல லட்சம் ரூபாய்களை மக்கள் பணி என்ற பெயரில் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கொடுத்து அவர்களது பேட்டிகளை எடுத்து வானொலியில் ஒலிபரப்புவதும். அந்தவகையில் என்ற விபச்சாரிக்கு பணத்தினை கொடுத்து எனக்கு எதிராக கருத்து கூறவைத்ததும். பாடசாலை அதிபருக்கு பணத்தினை கொடுத்து எனக்கு எதிராக சாட்சி கூறவைத்ததும்.

மற்றும் இவர்கள் உதவி செய்ததாக கூறும் உறவுகளுக்கு நடந்த அநீதிகளை கண்ட நான் உண்மைநிலையை அறிவதற்காக அவர்களது வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களது வாக்குமூலங்களையும் வீட்டு நிலவரங்களையும் எனது இணையத்தில் வெளிவிட்டு; மோசடிகளை நான் அம்பலப்படுத்தியதனால் என்மீது ஆத்திரமடைந்த ரி.ஆர்.ரி வானொலி என்னை மனநேயாளி என்றும் வர்ணித்திருந்தார்கள் ஆனால் நான் உண்மைகளை வெளிகொண்டுவந்ததால் மனநோயாளியானது திரவியநாதனே இதற்கு சாட்சி இது-



எனக்கு எதிராக பாதிக்கப்பட்ட உறவுகளைவைத்து சாட்சிகூறச்வைத்தும் தங்களது மோசடிகளை மறைக்கப்பார்க்கின்றனர். மற்றும்; அரச சார்புள்ள கட்சிகளுடன் என்னை தொடர்புபடுத்தியும் இராணுவ புலனாய்வுத்துறையுடன் என்னை இணைத்தும்; தங்களது மோசடிகளை மறைப்பதற்காக எடுக்கப்படும் ஓர் யுத்தியாக கைக்கொண்டுள்ளனர்.




ரி.ஆர்.ரி வானொலியில் குறிப்பிடுகின்றனர் நான் பாலசந்திரனை இராணுவபுலனாய்வு துறையுடனும் ஈபிடிபியி னருடனும் அவரது வீட்டுக்கு சென்று துன்புறுத்தி அவரை தங்களது மோசடிபற்றி செல்லும்படி வற்புறுத்தியதாக தெரிவித்தனா.; அவ்வாறே பாலச்சந்திரனையும் செல்லும்படி செய்துள்ளனர். அவர்களது மேசடிகள் பற்றிய அறிக்கை இணையத்தில் வெளிவந்ததால் என்மீது ஆத்திரமடைந்தவர்கள் பாலச்சந்திரனுடன் தொடர்புகொண்டு இவ்வாறு கூறவைத்துள்ளனர். இதுவும் அவர்களது நாடகமே.

ஆனால் உண்மையில் நடந்தது என்னவெனில் நான் பாலச்சந்திரனுடன் உடனடியாக தொடர்பினை ஏற்படுத்தி இதுபற்றி கேட்டதற்கு அவர் தனது தொலைபேசி உரையாடல் விளங்கவில்லை என பாசாங்கு செய்து இணைப்பை துண்டித்துவிட்டார். பாவம் அவர் என்ன செய்வார்? இவர்கள் பணத்தினை கொடுத்து பயமுறுத்திவைத்துள்ளனா. தங்களுக்கு எதிராக ஏதாவது யாரிடமாவது கூறினால் உயிருக்கு ஆபத்து என்று மிரட்டினால் யாராவது சாட்சிசெல்வார்களா? என்னையே எப்படி எல்லாம் மிரட்டினார்கள் நான் வெளிநாட்டில் உள்ளபடியால் தான் உங்களுக்கு இதனை தெரியப்படுத்துகின்றேன் இல்லை இலங்கையில் இருந்திருந்தால் என்னை கொலையே செய்து புதைத்திருப்பார்கள். இதற்கு ஆதாரமாக என்னை இராணுவத்தைவிட்டு கொலைசெய்வேன் என்னிடம் ஆள் இருக்கு என்று மிரட்டியவர் திரவியநாதனே அப்படிப்பட்டவர் பாலசந்திரனை விட்டுவைப்பாரா?

நான் இலங்கையில் பாலசந்திரனை சந்தித்தபோது அவர் தெளிவாக குறிப்பிட்டிருந்தார் அவர்களது ஊழல்பற்றி அதற்கு அவரது வாக்குமூலமே சாட்சி அவரின்; சம்மதத்துடனே தான் புகைப்படமும் எடுத்துக்கொண்டேன் என்பது உரையாடலில் இருந்து உங்களுக்கு தெரியவரும்.



பாடசாலை அதிபருக்கு சமூகப்பணி நிதியிலிருந்து ரூபா 15 ஆயிரம் லஞ்சமாக வழங்கி நான் பாடசாலை அதிபரிடம் 25500 ரூபா வேண்டியதாகவும் கூறும் படி அதிபரை கேட்டிருந்தனர். (இந்த 15 ஆயிரம் ரூபா பணமும் மக்களது பணம் )அதிபர் இவ்வாறு அவர்களுக்கு கொடுத்த கடிதத்தினால்; அதிபரது சேவைக்காலம் முடிந்து 9 மாதங்களாகியும் இன்னும் அதிபருக்கு ஓய்வூதியம் கிடைக்கப்பெறவில்லை. இது சம்மந்தமாக (03.10.212)கல்வித்திணைக்களத்திடம் விளக்கம் கேட்டிருந்தேன். ஆனால் இன்றுவரை பதில்எதுவும் கிடைக்கவில்லை. இவர்கள் கூறியதுபோல் அரசு சார்ந்தவர்களுடன் எனக்கு தொடர்பு இருந்தால் இவர்கள் சம்மந்தமான பதிலை பெறுவதற்கு எனக்கு ஒரு சில நாட்களே போதுமானது. ஆனால் நான் நியாயமான வழியில் இலங்கை மனித உரிமைகள் அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு நேர்மையான வழியில் இதற்கான விசாரனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. விசாரணை முடிந்தவுடன் பாடசாலை சம்மந்தமான இன்னும் பல அதிர்ச்சியான தகவல்களை உங்களுக்கு வெளிவிடுகின்றேன்.



வானொலியில் கூறப்பட்ட விடயம் என்னவென்றால் பாலசந்திரன் என்ற உறவுக்கு முதலில் 30 ஆயிரம் ரூபாயும் பின்னர் அனன்ரியம்மா 32 ஆயிரம் ரூபாயும் பின்னர் சவுதியில் இருந்து 10 ஆயிரம் ரூபாயும் மொத்தம் 72 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் உண்மையில் வழங்கப்பட்டது 40 ஆயிரம் ரூபா ஆனால் அன்ரியம்மாவால் ரி.ஆர்.ரி வானொலி காரியாலயத்தில் வழங்கப்பட்ட 32 ஆயிரம் ரூபா (200 யூரோ) இப்பணம் ரி.ஆர்.ரி வானொலியால் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. உண்மையில் ரி.ஆர்.ரி வானொலி வழங்கியிருந்தால் ஆதாரசிட்டையை அவர்களது இணையத்தில் வெளியிடலாம் தானே?

மிகவும் தெட்டத்தெளிவாக பல முறை வானொலியில் கூறப்பட்டது பாலசந்திரனிடம் நேரடியாக பணம்கொடுக்க மாட்டோம் என்றும் பணத்தினை (1லட்சத்தி 50 ஆயிரம் ரூபாவை) பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரனிடம் கொடுத்து அவரது உதவியாளர் மூலமாக கோழிப்பண்ணை அமைத்ததாக பலமுறை கூறினார்கள்.



இப்பொழுது கூறுகின்றனர் பாலசந்திரனிடம் நேரடியாக பணம்கொடுத்ததாகவும் ஒப்புதல்கடிதம் வாங்கப்பட்டுள்ளது.

கோழிப்பண்ணை அமைத்துகொடுப்பதற்கான நிதியானது வானொலி நிலையத்திடம் அன்ரியம்மாவால் வழங்கப்பட்டது. உண்மையில் இப்பணத்தினை யாரிடம் கொடுத்தார்கள் என்பதனை வங்கி கணக்கு மூலம் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். இரண்டுதடவைகள் (33 ஆயிரம்ரூபாய் ,33 ஆயிரம்ரூபாய்) கொடுத்ததாக கடிதம் பெற்றுள்ளார்கள் ஆனால் ஒருதடவை கூட 33 ஆயிரம் வழங்கியதாக குறிப்பிடவில்லை. அப்படி வழங்கியிருந்தால் அதனது பற்றுச்சீட்டை அவர்களது இணையத்தில் வெளிவிடலாம் தானே?

<

ஊறவுகளே இவர்களது கருத்துக்கள் முன்னுக்கு பின் முரணானதாக காணப்படுவதால் இப்பணத்தினை யாருக்காக பயன்படுத்தினார்கள் என்பதும் கேள்விக்குறியே!

அல்லது ரி.ஆர்.ரி வானொலியா? தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமச்சந்திரனா? இப்பணத்துக்கு பொறுப்பு.

அடிக்கடி வானொலியில் குறிப்பிடுகின்றார்கள் எப்போதும் ஓர் சென்ரும் தாம் பணமாக பெறுவதில்லை என்றும் தாங்கள் உதவிகேட்பவரையும் உதவிசெய்பவரையும் இணைத்து வைப்பதே தங்களது பணி என்றும் தெரிவிப்பார்கள் (அப்படியானால் ஏன் இவர்களுக்கு இரண்டு மூன்று தரகர்கள் வேண்டும் இலங்கையில்) அனால் அன்ரியம்மா மட்டும் இதுவரையில் 22 லட்சத்துக்கு மேல் (13500யூரோ) வானொலி நிர்வாகத்திடம்; ஒப்படைத்துள்ளார். அப்பணத்துக்கு என்ன நடந்தது?



இதுமட்டுமல்லாமல் பாரிசிலிருந்து தாஸ் என்ற உறவு திரவியநாதனிடம் தனது சகோதரர் மூலமாக 300யூரோ வழங்கியிருந்தார். இதுசம்மந்தமாக தாஸ் அவர்களை கேட்ட கேள்விக்கு ரி.ஆர்.ரியினரது பதில் எப்படி இதிலிருந்து உங்களுக்க தொரியவரும் 300யூரோவும் மளுங்கடிக்கப்பட்டுவிட்டது.

இதுமட்டுமல்ல இன்னும் பல லட்சம் ரூபாய்கள் (பல ஆயிரம் யூரோக்கள்) மளுங்கடிக்கப்பட்டுவிட்டது நிதிசேகரிக்காத பணி, ஒருசென்ரும் வாங்காத பணி உதவி செய்பவர்களையும் உதவிபெறுபவர்களையும் இணைக்கும் பணி என்று கூறுபவர்கள் எப்படி முழுப்பூசணிக்காயை சோற்றில் புதைத்துள்ளார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். நேரடியாக சில உதவிகள் சென்றடைந்தன பல உதவிகள் ரிஆர்.ரி வானொலியினரது நண்பர்கள் உறவினருக்கு சென்றுள்ளது. இதற்கும் என்னிடம் போதிய ஆதாரங்கள் உள்ளது. வேதனையான விடயம் என்னவென்றால் இவர்கள் செய்த இவ்வாறான செயல்களால் தமிழ்மக்களுக்கு கிடைக்ககூடிய உதவிகளை கேள்விகுறியாக்கியுள்ளது. அத்துடன் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ்பிரேமச்சந்திரன் மற்றும் சிவசக்திஆனந்தன் ஆகியோர் நடந்துகொண்ட விதங்களை பார்க்கும்போது மற்றைய தொண்டுநிறுவனங்களது நற்பணிக்கும் களங்கம்விளைவிப்பதாகவும் அவர்களுக்கு கிடைக்க கூடிய உதவிகளையும் கேள்விக்குறியாக்கியுள்ளனர். இவர்களது ஊழல்களால் உண்மையன தமிழ்த்தொண்டுநிறுவனங்களையும் மக்கள் சந்தேக கண்கொண்டு பார்க்கும் நிலமை புலம்பெயர் சமூகத்திடம் ஏற்பட்டுள்ளது.

ஊடகத்தர்மம் என்றால் என்ன எனறு கேள்வி கேட்பதற்கு ரி.ஆர்.ரி தமிழ் வானொலியினர் அருகதையற்றவர்கள் என்பதும். பாலசந்திரன் சம்மந்தமான விடயத்தினை 10 நாட்களுக்கு முன்னரே ரி.ஆர்.ரி சம்மந்தப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தியிருந்தேன். அதனை பார்க்காதது அவர்களது தவறேயாகும். மற்றும் வானொலியில,; தொலைபேசியில் உரையாடுவது எப்படி என தெரியாதவர்களும் ரி.ஆர்.ரி யினரே அதற்கான ஆதாரங்களை ஒலிவடிவில் உங்களுக்குத்தருகின்றேன் இதை விட மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் என்னையும் என்னை சார்ந்தேர்ர்களையும் விமர்சித்துள்ளார்கள்.



உதவிசெய்தவர்கள் தங்களை தொடர்புகொண்டால் தகுந்த விளக்கம் கொடுக்கப்படும் என அறிவித்திருந்தனர் அதற்கு உதவி செய்த கதிர் என்ற உறவு தொடர்பினை ஏற்படுத்தி தான் செய்த உதவியை தனது நன்பர்களுக்கும் அறிவித்து மேலும் உதவியை செய்யலாம் என்ற நல்ல நோக்கத்தில் விளக்கம் கேட்டதற்கு அவர்கள் கொடுத்த பதில்



இவர்கள் என்மீது எப்படி சாயம் பூசியுள்ளார்கள். அதுமட்டுமல்ல நிதிசேகரிக்காத சமூகப்பணியினர் எவ்வாறு ரி.ஆர்.ரி சமூகப்பணி நிதியிலிருந்து எவ்வாறு புத்தக பதிப்பாளருக்கு மிகுதிப்பணம் அனுப்பினார்கள்?

இதற்காக அன்ரியம்மா என்ற உறவு 1000 யூரேக்கள் வானொலியினரிடம் ஒப்படைத்துள்ளார். அதுமட்டுமல்ல இன்னும் பல உறவுகள் வானொலி நிர்வாகத்திற்கு 50, 100, 200 யூரோக்கள் கொடுத்துள்ளார்கள் இதற்கு என்ன நடந்தது? என்று புரிந்துகௌ;ளுங்கள்.

இவர்களிடம் மின்னஞ்சல் மூலம் கேள்வி கேட்டதற்கு அறிவிப்பாளர் திரு ரவி அவர்கள் தன்னை தமிழ் உணர்வாளர் என கூறியவரின் பதிவையும் பாருங்கள்.

இது தானா ஊடக நாகரீகம்.வானொலியில் குறிப்பிட்டார்கள் மனச்சாட்சியின் படி நடப்பதாக கூறியது எப்படி என்றால் கிடைக்கும் முழுபணத்தையும் எடுக்காமல் சிறுதொகையை மட்டும் வழங்கிவிட்டு மீதியை எடுப்பது தான் மனச்சாட்சி

உங்கள் மேல் தவறு ஏதும் இல்லை என்றால் நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் வாருங்கள் மக்கள் முன் வானொலி அரங்கத்தில் விவாதிப்போம். ஊடக தர்மம் என்றால் எதிர்தரப்பினரது கருத்தையும் கேட்பது தான் ஆனால் நீங்கள் நான் கதைத்தால் தொலைபேசியை துண்டித்துவிட்டு தனிமையிலே கூச்சலிடுவது எந்தவகையில் நியாயம். நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர்களின் பதில்



எனக்கு தெரியும் வரமாட்டார்கள் என்று ஏன் என்றால் அவர்களது மோசடிகள் அனைத்தும் அம்பலத்திற்கு வரும் என்ற பயம்.

அன்பார்ந்த உறவுகளே உங்கள் விமர்சனங்களை எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள். அடுத்த வெளியீடு மருத்துவ சிகிச்சை பெறாதவரை சிகிச்சை பெற்றதாக பொய் செல்லவைத்ததும்.

நேரடியாக மருத்துவமனைக்கு பணம் அனுப்புவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு தமிழ்தேசியகூட்டமைப்பு (ஈ;பிஆர்.எல்.எப் அணி)பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தனுக்கு அனுப்பி மோசடி செய்ததும்,

சிறையில் இருக்காதவரை சிறைக்கைதி என்று கூறி மக்களை ஏமாற்றி பெய்யான பிரச்சாரங்களை செய்த ரி.ஆர்.ரி வானொலி பற்றிய திடுக்கிடும் செய்திகள் காணத்தவறாதீர்கள்.

முக்கிய குறிப்பு -அன்பாந்த உறவுகளே நீங்கள் ரி.ஆர்.ரி வானொலியினருடன் தொடர்புகொண்டு இதுசம்மந்தமான கேள்விகளை கேட்பதன் மூலம் உண்மை தன்மைகளை வெளிக்கொண்டுவர உதவுங்கள். உங்களால் கேட்கப்படும் ஒவ்வெரு கேள்விகளும் பல பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு பயனளிக்கும் பல லட்சம் ரூபாய்களையும் காப்பாற்றும். கேள்வி கேட்காதவரையில் உண்மைகள் வெளிவருவதில்லை உங்கள் பணம் நீங்கள் கேள்விகேட்கலாம் தானே மனசாட்சியுள்ள தமிழனாய்.

நன்றி வணக்கம்
இராசா சிறிக்குமரன்
ஜேர்மனி
தொ.பேசி 004915210138995
மின்னஞ்சல் :asiasri@hotmail.com

இலங்கை நெற் இக்கட்டுரை பற்றித் தெரிவிப்பதாவது:

ஜேர்மனியைச் சேர்ந்த திரு. இராசா சிறிக்குமரனால் எழுதியனுப்பப்பட்டுள்ள இக்கட்டுரை எவ்வித கூடுதல் குறைத்தலுமின்றி உள்ளது உள்ளவாறே அவரது நடையில் மாற்றம் கூடச் செய்யாமல் பிரசுரிக்கப்படுகிறது.

என்றாலும், இக்கட்டுரையின் இடையிடையே வரும் ஒலிக்கோப்புக்களில் உள்ள பேச்சுக்கள் ஊடக தருமத்திற்கு அப்பாற் பட்டதென்பதை நாம் நன்கு அறிவோம். மிகவும் அசிங்கமான அருவறுக்கத் தக்க பேச்சுக்கள் இவ்வொலிக்கோப்புக்களில் உள்ளன. சிலவற்றில் சிறிக்குமரனின் கட்டுரையைப் பிரசுரிக்கும் இலத்திரனியல் ஊடகங்கள் அசிங்கப்படுத்தப்பட்டுள்ளன. நாமும் அவரின் ஆக்கத்தைப் பிரசுரித்ததனால் குற்றச் சாட்டுக்கு உள்ளாகியுள்ளோம். என்றாலும்,

காலத்தின் தேவைகருதி, சில உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வேண்டிய தேவையிருப்பதால், அப்பாவித் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு பணவசூலில் சிக்கவைக்கப்படுவதால் நாம் அவரின் கட்டுரையை இங்கு பிரசுரிக்கிறோம். என்றாலும், சிறிக்குமரனுக்கும் இலங்கைநெற்றுக்கும் தனிப்பட்ட ரீதியில் எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை என்பதையும்,

இக்கட்டுரையை ஒட்டி அல்லது வெட்டி எமக்கு அனுப்பப்படுகின்ற எந்த ஆக்கத்தையும் நாம் பதிவேற்றத் தயாராக இருக்கிறோம் என்பதையும் வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com