வீடுகளில் கள்ளத்தனமாகப் புகுந்து 55 இலட்சம் ரூபாவுக்கு மேலான பெறுமதியுள்ள நகைகளைக் கொள்ளையடித்த குழுவை நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட 25 – 30 வயதுக்கு இடைப்பட்ட மூவரும் நீர்கொழும்பு பெரிய முல்லை வாசிகளான திருமணமாகாத இளைஞர்களாவர்.
வீடுகளில் சமையலறைக் கதவுகளை சிறிய இரும்புக் கூர் போன்றவற்றின் துணையுடன் திறந்து உள்ளே போய் வீட்டில் இருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்ததாக சந்தேக நபர்களை விசாரணை செய்த போது வெளிப்பட்டது. இவர்களில் பிரதான சந்தேக நபர் இரவு சமூக மண்டபத்தில் வேலை செய்பவர் என்றும் அவலர் சூதாட்டத்துக்கும் போதைப் பொருளுக்கும் அடிமையானவர் என்றும் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களிடம் இருந்த திருடப்பட்ட நகைகளும் கைப்பற்றப்பட்டன. அவற்றுடன் மடிக்கணினி. டிஜிட்டல் கெமரா போன்றனம் இருந்தன என்று பொலிஸ் கூறியது.
No comments:
Post a Comment