கொழும்பு கட்டுநாயக்க கடுகதி வீதி இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை பொதுமக்களின் பார்வைக்காக!
கொழும்பு கட்டுநாயக்க கடுகதி வீதியை இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை பொதுமக்களுக்கு பார் வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு கட்டு நாயக்கா கடுகதி வீதி எதிர்வரும் 27ம் திகதி திறந்து வைக்கப் படவுள்ளது. அதற்கு முன்னைய 3 நாட்களுக்கு கடுகதி வீதியை திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தினங்களில் பொது மக்களின் பங்களிப்புடன் கலாச்சார நிகழ்வகள், விளையாட்டுக்களும் இடம்பெறும். ஜனாதிபதியின் பணிப்புரைக் கமைய அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் இந்த நிகழ்ச்சிகளை நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சும், நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபையும் கடுகதி வீதி அமையும் உள்ளுராட்சி நிறுவனங் களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இன்று காலை 6 மணிக்கு ஜா-எல மற்றும் பேலியகொட பிரவேச வாசலிலிருந்து மரதன் ஓட்ட போட்டியுடன் ஆரம்பமாகும் நிகழ்வுகளை தொடர்ந்து கடுகதி வீதியை பொது மக்களுக்கு பார்வையிட சந்தர்ப்பம் கிடைக்கும். தொரண சந்தியில் நாளை இரவு இசை நிகழ்ச்சியொன்று இடம்பெறவுள்ளது.
0 comments :
Post a Comment