யாழ் நாச்சிமார் கோயில் தேர் முட்டியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள நாச்சிமார் கோயில் தேர் மூட்டியில் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று கண்டெடுக்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சடலம் கடந்த நான்காம் திகதி யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் காணாமற்போன 45 வயதான பெண்ணுடையது என அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வவுனியாவைச் சேர்ந்த இவர் மனநோய்க்கான சிகிச்சைகளுக்கென யாழ்ப்பாணத் திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தபோது காணாமற்போனதாக பொலிஸ் நிலைய த்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசியதையடுத்து கோயிலுக்கு முன்னாள் உள்ள முச்சக்கரவண்டியின் சாரதிகள் கோயில் தேர் மூட்டிப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ஆலய நிர்வாகத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து அதனைப் பார்வை யிட்ட ஆலயத்தினர் அங்கு பெண் ஒருவரின் சடலம் இருப்பதை அவதானித்ததுடன் சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட தையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை நேற்று மீட்டெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment