Sunday, October 6, 2013

முன்னாள் ஆயுதக்குழுக்களை ஓரம் கட்டும் செயற்பாட்டில் தமிழரசுக் கட்சியினர். ஒத்துப்போகின்றாரா விக்கினேஸ்வரன்?

நடைபெற்று முடிந்த வடமாகாண தேர்தலில் முன்னாள் ஆயுதக்குழுக்களான ஈபிஆர்எல்எப் , ரெலோ , புளொட் போன்ற கட்சிகள் வெற்றியீட்டியுள்ளது. வேட்பாளர் தெரிவின்போது தமிழரசுக்கட்சி அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஆசனங்களை மேற்படி கட்சிகளுக்கு வழங்கியிருந்தபோதும் குறித்த கட்சிகளால் தமது இருப்பை தக்க வைக்க முடிந்துள்ளது.

அதாவது தமிழரசுக் கட்சி எதிர்பார்த்ததற்கு மாறாக மேற்படி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றியீட்டியிருக்கின்றார்கள். குறிப்பாக யாழ் மாவட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் புலிகளின் முன்னாள் போராளி கணவனை இழந்தவள் இறுதி யுத்தத்தின் சாட்சியம் என்ற கோஷங்களுடன் வாக்குகேட்ட இருவருக்கும் அடுத்த படியாக புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருக்கின்றார்.

இந்நிலையில் குறித்த கட்சிகள் அமைச்சுப்பதவிகள் கூட்டமைப்பின் சக கட்சிகளிடையே பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. இக்கோரிக்கைக்கு தமிழரசுக்கட்சியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதேநேரம் வட மாகாண சபையின் அமைச்சரவையில் படித்தவர்கள் மாத்திரமே தெரிவு செய்யபடவேண்டும் என முதலமைச்சர் விக்கினேஷ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தமிழரசுக்கட்சியினரின் நிகழ்சி நிரலுக்கு இசைவாக இந்த முடிவை எடுத்துள்ளாரா என அவருக்கு ஆதரவளித்த சக கட்சிகள் விசனமடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

No comments:

Post a Comment