Thursday, October 31, 2013

அனைத்து இறைச்சிக் கடைகளும் இழுத்து மூடப்பட வேண்டும்...! பிரேரணை அதிக வாக்குகளால் வெற்றி!

தொம்பே தேர்தல் பிரிவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்ற பிரேரணை, பிரதேச சபையின் இம்மாதத்திற்கான கூட்டத்தில் மேலதிக 4 வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளது.

வாக்கின் போது, அதனை ஆதரித்து ஒன்பது வாக்குகளும், எதிராக ஐந்து வாக்குகளும் கிடைத்துள்ளன. உறுப்பினர்கள் மூவர் வாக்களிக்க மறுத்துள்ளனர்.

தலைவர் மிலான் ஜயதிலக்க (ஐ.ம.சு.மு) யினால் தொம்பே தேர்தல் பிரிவில் இறைச்சிக் கடைகளுக்காக ஏலவிற்பனை நடைபெறக்கூடாது என்ற பிரேரணை முன்வைக்கப்பட்ட போதே, எந்தவொரு இறைச்சிக்கடையும் டென்ர்ருக்கு விடப்படக்கூடாது என்று இடையில் பிரதேச சபை உறுப்பினர் அமின்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டது.

அத்தோடு இதுபற்றி ஆய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினரின் அறிக்கை சபைக்கு முன்வைக்கப்பட்டதன் பின்னர், இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டுமா? என்ற தேர்தல் இடம்பெற்று, அதில் மூடப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெற்று வெற்றிபெற்றுள்ளன.

(கேஎப்)

3 comments :

Anonymous ,  October 31, 2013 at 11:23 AM  

Well done.Thank God.May God bless the poor animals

Anonymous ,  October 31, 2013 at 5:59 PM  

Close the meat stalls and open one free meal a day stalls for the poorest of the country.You may get the blessings of the loving God.

Anonymous ,  November 2, 2013 at 8:12 AM  

Take out all the meat stalls from the country.Love is more than anything else in the world.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com