சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் சுயசரிதை அடங்கிய நூல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், பண்டார நாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப் பட்டது. சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் 71வது பிறந்த தினமும், பாராளுமன்ற வாழ்க்கைக்கு 25 ஆண்டுகள் பூர்த் தியும், அவரது சுயசரிதை நூல் வெளியீட்டை முன்னிட்டும், இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
1942 ஒக்டோபர் 30ம் திகதி பிறந்த சமல் ராஜபக்ஷ, காலி டிக்மன்ட் கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியை ஆரம்பித்தார். உப பொலிஸ் இன்ஸ்பெக்டராக 1964ம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட அவர், 8 வருடங்கள் பொலிஸ் துறையில் கடமையாற்றினார்.
1995ம் ஆண்டு முல்கிரிகல இடைத்தேர்தல் மூலம், செயற்பாட்டு அரசியலில் பிரவேசித்த அவர், 1989ம் ஆண்டு பொது தேர்தலில் அராஜக கும்பலுக்கு சவால் விடும் வகையில், வெற்றியீட்டி, பாராளுமன்றம் தெரிவானார். அன்று முதல் இன்று வரை 25 வருடங்களாக தொடர்ந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து வரும் அவர், பல்வேறு அமைச்;சு பதவிகளையும் வகித்து வந்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்புகளை நல்கியுள்ளனர். முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர்களில் ஒருவரான புண்ணிய டி சில்வாவின் ஆக்கத்தில் வெளியான சமல் ராஜபக்ஷவின் சுயசரிதை நூலின் முதல் பிரதி, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தலைமை உரையை, கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி குமார ஹிரிம்புரேகம நிகழ்த்தியதுடன், எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரும் இங்கு உரையாற்றினர். மகா சங்கத்தினர், ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உட்பட பலர், இதில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment