நான் முகநூலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டேன்! - ஜனாதிபதி
கடந்த காலங்களில் பேஸ்புக் தடை செய்யப்படவிருப் பதாக சில ஊடகங்கள் தவறான பொருள் கொடுத்திருந்தன என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். தேவி பாலிகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
“முகநூலின் வாயிலாகத்தான் எங்களுக்கு நண்பர்கள் இருப்பதாக நாங்கள் எண்ணிக் கொண்டிருக்றோம். பேஸ் புக் மூலமாக தெரியாதவர்களை நண்பர்களாகப் பெற வேண்டாம் என நான் கூறிக் கொள்ளவிரும்புகிறேன். பேஸ் புக் நண்பர்களையெல்லாம் நம்ப வேண்டாம் என்று நான் சொன்னதாக சில பிள்ளைகள் இல்லாதவர்கள் மறுபக்கத்திற்குப் பொருள் கொண்டிருக்கலாம். அவர்கள் நான் பேஸ் புக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக பொருள் கொண்டிருக்கிறார்கள்.
“நாங்கள் தகவல் தொழில்நுட்பத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. ஆயினும் இதனால் எங்கள் பிள்ளைகள் பாதிப்படையக் கூடாது. அவர்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும். அது பெற்றோருக்கும் எங்களுக்குமுள்ள கடமையாகும். அதனால், முகநூலில் இருக்கின்ற பிள்ளைகள் அங்குள்ளவர்களை விட வீட்டில் உள்ள பெற்றோருக்கு நம்பிக்கையானவர்களாக நடந்து கொள்ளுங்கள்.“ எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேலும் அங்கு தெளிவுறுத்தியுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment