இலங்கையில் பண வீக்கம் வீழ்ச்சி!
இலங்கையில் பண வீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 56 மாதங்களில் பண வீக்க சுட்டெண்ணை ஒற்றை இலக் கத்தில் பேணுவதற்கு அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் நிதி கொ ள்கை வெற்றி பெற்றுள்ளதால் பண வீக்க சுட்டெண்ணை ஒற்றை இலக்கத்தில் பேண முடிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கையின் பண வீக்கம் 6.2 வீதமாக காணப்பட்டது. பண வீக்கம் தொடர்பான எதிர்கால இலக்குகளும், தொடர்ந்தும் சாதகமான போக்கில் இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு பொருட்களின் விலையேற்றம் தடுக்கப்பட்டமை தேசிய விநியோக துறையில் தடைகள் வீழ்ச்சியடைந்தமை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் பண வீக்கம் வீழ்ச்சியடைவதற்கு வழிவகுத்தாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இடுத்த வருடம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக நிதி கொள்கையில் தளர்வு போக்கை கடைபிடிக்கும் சூழல் காணப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment