Tuesday, October 22, 2013

கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேகப் பாதைக் கட்டண விபரங்கள்

எதிர்வரும் 27 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் திறந்து வைக்கப்படவுள்ள கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதையில் பயணம் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும் என்பது அறிந்ததே. குறிப்பிட்ட பாதையின் கட்டண வீதங்கள் வாகனத்தின் தன்மையையும் பயணம் செய்யும் தூரத்தையும் பொறுத்து மாறுபடுகின்ற அதே வேளை பாதையில் பயணம் செய்யும் விதிகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டதன் பின்னர் அந்த நெடுஞ்சாலையை பயன்படுத்துவதற்கான கட்டணம் 300 ரூபாவிலிருந்து 800 ரூபாவரை இருக்குமென துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு நேற்று (21-10-2013) அறிவித்துள்ளது.

பேலியகொடையிலிருந்து கட்டுநாயக்கவரை செல்லுகின்ற கார்,ஜீப்,சிறிய வான், கெப் ரக வாகனங்களுக்கு 300 ரூபாவும் அடுத்த வகையான வாகனங்களுக்கு 450 ரூபாவும் பஸ்களுக்கும் அதனிலும் பெரிய வாகனங்களுக்கு 800 ரூபாவும் அறவிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தையும் கொழும்பையும் இணைக்கும் கட்டுநாயக்க புதிய அதிவேக நெடுஞ்சாலை பொதுமக்களின் பார்வைக்காக நாளையிலிருந்து 22 ஆம் திகதியிலிருந்து மூன்று நாட்கள் திறந்துவிடப்படும்.

ஒக்டோபர் 27 ஆம் திகதியன்று இந்த நெடுஞ்சாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படுவதற்கு முன்னர் பொதுமக்கள் பார்வைக்காகவும் சமய அனுட்டானங்களுக்காகவும் கேளிக்கைகளுக்காகவும்; இந்த நெடுஞ்சாலை திறந்துவிடப்படவுள்ளது.

இதன்போது பொதுமக்கள் இந்த அதிவேக பாதைவழியே நடந்து செல்ல முடியும் எவரும் வாகனங்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். வீதி அபிவிருத்தி அதிகாரசபையானது ஒக்டோபர் 24 ஆம் திகதியின்று இந்த நெடுஞ்சாலையில் நடை பவனியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

பல சமய, கலாச்சார, கேலிக்கை நிகழ்வுகள் கட்டுநாயக்க சீதுவை, ஜா-எல நகர சபைகளினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. முத்துராஜவெல சதுப்பு நிலம், நீர்கொழும்பு கடனீரேரி ஆகிய திறந்த வெளியூடாக இந்த நெடுஞ்சாலை 26 கிலோமீற்றர் நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment