Sunday, October 20, 2013

கூட்டமைப்பின் அடிநாதக் கொள்கை அம்பலம்! இதுதானா த.தே.கூ வின் சுயரூபம்?

வடமாகான முதலமைச்சராக தெரிவான விக்னேஸ்வரன் தமது கட்சி உறுப்பினர்களால் விமர்சிக் கப்படுவதையும் இவர்கள் பதவிக்காக் தமக்குள்ளேயே மோதிக்கொள்ளும் நிலைமை உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் மக்களின் உரிமைகளுக்காக இவர்கள் எவ்வாறு செயற்படப்போகின் றார்கள் என ஜனாதிபதியின் இந்து மத அலுவல்கள் விவகார இணைப்பாளர் பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா கேள்வியெழுப்பியுள்ளார்.

பதவி மோகம் இல்லை என்று குறிப்பிடும் இவர்கள் அதனையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகிறார்கள். வௌ;வேறு இடங்களில் வௌ;வேறு நேரங்களில் மாகாணசபை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து ஒற்றுமையின் சின்னத்துக்கு இழுக்கைச் சேர்த்துவிட்டார்கள் என மக்கள் அங்கலாய்ப்பதாகவும் பாபுசர்மா மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல்களுக்காக கூட்டுச்சேர்ந்து பதவிக்காக பிரியும் இவர்கள் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஒற்றுமை மற்றும் உரிமையின் குரலாக ஒன்றுபடுவது என்பது ஐயமே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவர்களின் அண்மைக்கால செயற்பாடகள் தொடர்பில் தமிழ் சமூகம் பல்வேறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றது கொள்கைக்காகவே தாம் அரசியல் நடத்துவதாகவும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதே தமது இலக்கு எனவும் மத்திய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைப் பெற்றால் அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமெனவும் அபிவிருத்தி அரசியல் ஒருபோதும் விடிவு தரப் போவதில்லை எனவும் மேடைகளில் கூறித்திரிந்த த.தே.கூ அமைச்சுப் பதவிகளுக்கு அடிபடுவது வேடிக்கையாகவே உள்ளது.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கும் போது இது இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் எனவும் இதில் எங்களுக்கு எத்தகைய ஆர்வமோ அக்கறையோ கிடையாதென நழுவல் போக்குடன் செயற்பட்ட கூட்டமைப்பு, இலங்கைக் குடியரசின் யாப்பின் கீழான 13வது சீர்திருத்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கும் அந்தச் சபைகளின் அமைச்சுப் பதவிகளுக்கும் ஆலாய்ப் பறப்பதேன் என்ற கேள்விக்களும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

அத்துடன் வடக்கு கிழக்கு பிரிப்புக்கு பின்னர் கிழக்கு மாகாண சபைக்கென முதன் முதலாக நடந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட கூட்டமைப்பு அதன் பின்னர் நடைபெற்ற மாகாண சபையில் பங்கேற்று முஸ்லிம் காங் கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்கத் துணிந்த மர்மம்தான் என்ன? தமிழ்க் கூட்டமைப்பு காலத்துக்குக் காலம் தமது கொள்கைகளை மாற்று வதற்கு என்ன காரணம்? என்ன என்பதற்கு விடைகிடைந்துள்ளது.

பாராளுமன்றத்தில் ஒரு கருத்து, கருத்தரங்குகளில் வேறொரு கருத்து. வடக்கு – கிழக்கில் இன்னுமொரு கருத்து, இது தானா கூட்டமைப்பின் அடிநாதக் கொள்கை. தேர்தலின் பின்னர் கூட்டுக் கட்சிகளிடையே ஒருமித்த நிலைப்பாடு இல்லை. ஆளை ஆள் மேடைகளில் விமர்சிப்பதும் மாறி மாறி அறிக்கை விடுவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தையும் அமைச்சர்களையும் தாறுமாறாக விமர்சித்து விட்டு கொழும்பு வந்து சலுகைகளுக்காக தாஜா பண்ணுவது என்ன நியாயம் எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் சீரிய வழிகாட்டலில் இழந்த வடக்கு கிழக்கை கட்டி யெழுப்பி மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதே காலத்தின் தேவையாகும் எனவும் வடக்கைக் கட்டியெழுப்ப கூட்டமைப்பின் அதிகாரத்தின் கீழுள்ள வட மாகாண சபை முன்னின்று உழைக்க வேண்டுமெனவும் தமது சுயலனுக்காகவும் கட்சி அந்தஸ்துக்காகவும் முரண்பட்டுக்கொண்டும் கொள்கைகளை மாற்றிக்கொ ண்டும் செயற்படத் துணிந்தவர்கள் மக்களின் நலன் கருதி தமது கொள்கைகளில் நெகிழ்வுப் போக்கினைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் வடக்கு மக்கள் தெரிவித்தனர்.

2 comments :

Anonymous ,  October 20, 2013 at 8:17 PM  

They do practise the same old tricks
in different ways time to time.

Anonymous ,  October 21, 2013 at 9:42 AM  

They have the pschological tactics
how to bring the people to a emotionally charged atmosphere by making them to swallow their well prepared emotional issues.Inevitably We eat their well prpared waste time to time.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com