இலங்கைக்கு கஸினோவைக் கொண்டுவந்த ஜனாதிபதி என்ற பெயர் வேண்டாம்....
இலங்கைக்கு கஸ்னோவைக் கொண்டுவந்தவர் மகிந்த ராஜபக்ஷ என்ற இழிநாமம் ஜனாதிபதிக்கு வந்து சேரலாம் என்பதால் பொதுமக்களின் பேச்சுக்கு செவிசாய்த்து, காலம் கடத்தாமல் கஸினோ பற்றிய சட்டத்தை பூண்டோடு அழித்துவிட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆவன செய்ய வேண்டும் என்று நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவாவே சோபித்த தேரர் குறிப்பிடுகிறார்.
அவ்வாறு நடக்காதுவிட்டால் போரில் வெற்றிகண்ட ஜனாதிபதி என்ற பெருமதிப்பு மக்கள் மத்தியிலிருந்து அழிந்துகொண்டே செல்லும் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
கொழும்பு நூலக சபையில் இடம்பெற்ற கூட்டத்தின்போதே மாதுலுவாவே சோபித்த தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து இதுதொடர்பில் கருத்துரைக்கும்போது,
‘நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாத்த தலைவர் என்ற நாமத்தை மகிந்த ராஜபக்ஷ பெற்றிருப்பதுபோல, கஸினோவிலிருந்து நாட்டைப் பாதுகாத்தவர் எங்கள் சிறந்த தலைவரான மகிந்த ராஜபக்ஷ என்ற கௌரவம் அவருக்குக் கிடைப்பதையே நாங்கள் மிகவும் விரும்புகிறோம்.
அதனால், நாட்டு மக்களின் பேச்சுக்கு செவிசாய்த்து காலம் தாழ்த்தியிருக்கின்ற கஸினோச் சட்டத்தை முற்று முழுதாக குழிதோண்டிப் புதைத்துவிடுங்கள். மாற்றங்களுடன் அதனைக் கொண்டுவர முனைந்தால் அதற்கெதிராக நாங்கள் எந்தப் போராட்டத்தையும் நடாத்துவோம்’ எனவும் தெளிவுறுத்தியுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment