குடும்பஸ்தர் ஒருவரின் மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கேட்ட அதிகாரிக்கு பிணை!
பிபிலை, பிம்கொட எனுமிடத்தில் கமம் செய்வதற்காக காட்டை அழித்த குடும்பஸ்தர் ஒருவரைக் கைது செய் யாமல் இருக்கவும் குறித்த நபருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு அவரின் மனைவி யிடமிருந்து பாலியல் இலஞ்சம் கோரினார் என குற்றஞ் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிபில வனப்பிரிவைச் சேர்ந்த உத்தியோகஸ்த்தர் நேற்றுகொழும்பு நீதவானினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இவர் மீதான விசாரணை முடிந்துவிட்டதாக வழக்குத் தொடுநர் அறிவித்ததைத் தொடர்ந்து நீதவான் இந்த வனவள அதிகாரியை 15,000 ரூபா காசு மற்றும் தலா 500,000 ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணைகளிலும் விடுவித்தார்.
பிபிலை, பிம்கொட எனுமிடத்தில் கமம் செய்வதற்காக காட்டை அழித்த குடும் பஸ்தர் ஒருவரைக் கைது செய்யாமல் இருக்கவும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் சந்தேக நபரான வனவள அதிகாரி ஜனக தென்னக்கோன், காடழித்தவரின் மனைவியிடமிருந்து பாலியல் இலஞ்சம் கோரினார் என குற்றஞ்சாட்டப்பட்பட்டது.
இந்நிலையில், முறைப்பாட்டாளர் இலஞ்ச ஆணைக்குழுவிடம் முறையிட்டதைத் தொடர்ந்து இலஞ்ச ஆணைக்குழு சந்தேகநபரைக் கைது செய்தது. இவர் முறைப் பாட்டாளரின் வீட்டில் அவருடன் பாலுறவு கொள்ள தயாரானபோதே இவரை இலஞ்ச ஆணைக்குழுவினர் கைது செய்ததாக கூறப்பட்டது.
சந்தேகநபரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், பிள்ளைகளும் வேறு ஆட்களும் வீட்டிலிருக்கும் போது முறைப் பாட்டாளரின் வீட்டில் உடலுறவு கொள்ள சந்தேகநபர் முயன்றார் என்பது அபத்தமானது என வாதிட்டார். இந்த வழக்கு விசாரணை, ஜனவரி 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment