Friday, October 18, 2013

சர்வதேச வறுமை ஒழிப்புத் தின நிகழ்வுகள் கல்முனையில்...! (படங்கள் இணைப்பு)

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் நேற்று (17) நடைபெற்றது.

பிரதம அதிதியாக பிரதி சமுர்த்திப் பணிப்பாளர் யு.பி.எஸ்.அனுரத்த பியதாச, பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல்,மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் பரிறா சஹீட், முகாமையாளர் ஏ.சி.அன்வர் ஆகியோர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், திரியபியச திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டைத் திறந்து வைத்து பயனாளியிடம் வீட்டின் சாவி வழங்கப்பட்டது. மேலும் சமுர்த்தி பயனாளிகளுக்கு சுய தொழில் முயற்சிக்கான கடன் உதவியும் வழங்கப்பட்டதுடன் சமுர்த்தி பயனாளிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அதிதிகள், மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் கௌரவிக்கப்பட்டனர்.

(பி.எம்.எம்.ஏ.காதர்)

No comments:

Post a Comment