மனிதநேயமற்ற மருந்தாளர்கள் ஐவர் பணிநீக்கம்!
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு வழங்கப்படும் ஒளடதங்களை திருடி விற்பனை செய்த மருந்தாளர்கள் ஐவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மருந்துகள் அடங்கிய ஒரு போத்தலொன்றின் விலை 2 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமான தாகும். விசேட மருந்தாக கருதப்பட்டு சிறுவர்களுக்கு இலவசமாக வழங்க, குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து இந்த மருந்துகளை கொள்வனவு செய்து வருகின்றது.
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் பணியாற்றும் குறித்த மருந்து கலவையாளர்கள் 4 போத்தல் மருந்துகளை இம்மருந்தை விநிNயுhகம் செய்த கம்பனிக்கே மீண்டும் பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கியுள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவற்துள்ளது.
இது தொடர்பான விசாரணை அறிக்கை, சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலகவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த 5 உறுப்பினர்களும், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment