பொதுநலவாய மாநாட்டில் பேசவருகின்றார் விக்னேஷ்வரன் !
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஷ்வரன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுவார் என யாழில் இருந்து வெளிவருகின்ற உதயன் குறிப்பிடுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைகளு டனான பேச்சுவார்த்தையின் போது இவ்விடயம் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள உதயன், இவ்வாறு அவர் உரைநிகழ்த்துவதன் மூலம் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதற்கான முயற்சிகள், வடக்கில் தேர்தல் நடாத்துதல் போன்றன தொடர்பில் உலகத் தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதற்குக் காரணமாக அமையும் எனவும் அங்கு கலந்தாலோசிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
எதுஎவ்வாறாயினும், இதுதொடர்பில் இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை எனவும் தெரியவருகின்றது.
(கேஎப்)
2 comments :
Well, he must speach in slave countries organization, i ask to all , are we sri lankan stil slave to UK, and is queen Elisabeth leader to all those countries , are anzy body remember , that now year 2013 ?
It will be a good opportunity to make his maiden speech in an international conferrence.Hope this would make the eagered strange eyes to come to a satisfactory conclusion
He also can prove himself as an eager beaver of the nation.
Post a Comment