ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர் இந்திரராசா விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!
வடமாகாண சபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தெரிவு செய்யப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளாமல் இருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர். எல்.எவ்.) உறுப்பினர் இராமநாதர் இந்திரராசா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியினைச் சேர்ந்த இவர் வவுனியாவில் தமது கட்சி அங்கத் தவர்கள் மூவர் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளும் போது, தான் முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொள்வதாகத் தெரிவித்திருந்த நிலையில் வலி.மேற்கு சங்கானைப் பிரதேச சபை கட்டிடத் தொகுதித் திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வருகை தந்திருந்தார் இதன்போதே அவர் முன்னிலையில் இந்திராசா சத்தியப்பிரமாணம் மேற்கொண் டுள்ளார்.
0 comments :
Post a Comment