முஹம்மட சியாமின் படுகொலை தொடர்பாக குற்றஞ்சாட் டப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உட்பட 7 சந்தேக நபர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சாட்சியாளர்களுக்கு அழுத்தம் பிரயோகித்த சம்பவம் தொடர்பாக 5 பேரின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் தெரிவித்தனர்.
சாட்சியாளர்களுக்கு அழுத்தம் ஏற்படுத்திய சம்பங்களில் சந்தேக நபரான வாஸ் குணவர்தன தரப்பிலான விடயங்கள் குறித்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் முஹம்மட் சஹாப்தீன் சந்தேக நபர்களை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேநேரம் முஹம்மட் சியாம் படுகொலை சம்பவத்தில் அரச சாட்சியாளராக குறிப்பிடப்பட்டுள்ள முஹம்மட் பொளஸ்தீன் எனும் சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும், 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment