Wednesday, October 23, 2013

ஜயோ ஊடகங்களில் வெளியாகியிருப்பது போல ஒன்றும் நடக்கவும் இல்லை! பரிந்துரைகள் முன்வைக்கப்படவும் இல்லை!

சிறைக் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான அதி காரங்கள் ஜனாதிபதியிடமிருந்து நீதியமைச்சருக்கு மாற்றப் படுவதற்கான பரிந்துரைகள் எதுவும் ஹெக்டர் யாப்பா குழுவினால் முன்வைக்கப்படவில்லை என்று நீதியமை ச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இலங்கையில் சில ஊடகங்களில் வெளியாகியிருப்பது போல, ஒன்றும் நடக் கவும் இல்லை பரிந்துரைகள் முன்வைக்கப்படவும் இல்லை என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சிறைக் கைதிகளின் நலன்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பது பற்றிய சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு தொடர்பான ஹெக்டர் யாப்பா குழுவின் பரிந்துரைகள் தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இலங்கையில் சிறைச்சாலை மறுசீரமைப்பு தொடர்பில் இதுவரை காலமும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் அனைத்தையும் உள்வாங்கி அவற்றை சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட அறிக்கையே நீதியமைச்சுக்கு கிடைத்திருப் பதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதேவேளை, கண்டியில் பௌத்த பிக்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய நீதிமன்றம், சிவில் வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் என்றும் நீதியமைச்சர் கூறினார். பௌத்த விகாரைகள்-காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் எழுகின்ற காணி வழக்குகளை விசாரிப்பதற்காகவே இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டிருப்ப தாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

குற்றவியல் வழக்குகளைப் பொறுத்தவரை, சாதாரண- வழமையான நீதிமன்றங் களின் கீழேயே பௌத்த பிக்குகள் தொடர்பான வழக்குகளும் விசாரிக்கப்படும் என்றும் நீதியமைச்சர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com