யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் செய்த இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க!
இராணுவ தளபதி தயா ரத்னாயக்க முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததுடன் தென்மராட்சி பகுதிக்கு சென்று அங்குள்ள படை முகாம்களின் நிலைமைகள் பற்றி ஆராய்ந்ததுடன் யாழ். நகரிற்கு வெளியே பண்ணை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படை முகாமில் இராணுவ வீரர்களுடன் சந்திப்பொன்றினையும் மேற்கொண்டார்.
இந்தச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த படையினர் கடுமையான ஒழுக்க விதிகளைப் பேணுவது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியதுடன் புலிபயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் படையினரின் நடவடிக்கைகளில் மாற்றம் ஒன்று அவசியம் என தெரிவித்தார்.
மேலும் இராணுவத்தினருக்கு பயிற்சிகள் மிக முக்கியமானது எனவும், பயிற்சிகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது என்பதுடன் பொதுமக்களுக்கு எவ்வாறு சேவையாற்றுவது என்பது தொடர்பில் படையினருக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
0 comments :
Post a Comment