கசினோ சூதாட்டம் சட்டமாக்கப்பட வேண்டும் என ஆலோசனை வழங்குபவர்கள் பிசாசுகள்! சீறிப்பாய்கின்றார் கலகொட
இலங்கையில் உல்லாசப் துறையை அபிவிருத்தி செய்ய வேன்டும் என்பதற்காக கசினோ சூதாட்டம் சட்டமாக்கப்பட வேண்டுமெனம் எனவும், அதற்கான சட்டங்கள் நிறைவேற் றப்பட வேண்டும் என அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்கள் யார்? எனவும், அவ்வாறு ஆலோசனை வழங்குவோர் பிசாசுகள் என்றும் பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விமர்சித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்தார். தேரர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கசினோ சூதாட்டத்தால் உல்லாசப் பிரயாணத் துறையை வளர்ச்சியடையச் செய்ய முடியாது. தாய்லாந்தில் உல்லாசப் பிரயாணத் துறையை வளர்ச்சி பெறச் செய் வதற்காக கசினோக்கள் ஆரம்பிக்கப்படவில்லை. கசினோ சூதாட்டம் சட்டமாக்கப் பட்டால் கொழும்பின் நிருவாகம் பாகிஸ்தானிய போதைவஸ்து பாதாளக் குழுக்களின் கைகளுக்கு சென்று விடுவதோடு மட்டுமன்றி ஆயுதக் கலாசாரமும் விபசாரமும் தலைதூக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அன்றும் இன்றும் என்றும் கசினோ சூதாட்டத்தை நாம் எதிர்க்கின்றோம் அவ் முடிவில் மாற்றம் இல்லை. இந்தியா இலங்கையில் கசினோ சூதாட்டத்தில் ஈடுபடு வதற்காக இந்தியர்கள் வரப்போவதில்லை. பாகிஸ்தானியர் தான் வருவார்கள் ஏற்கனவே கிழங்குக் கொள்கலன்களில் பாகிஸ்தானிலிருந்து போதைவஸ்துக்கள் கொண்டு வரப்பட்டன.
அது மாத்திரமின்றி கருத்தடை மாத்திரைகள், போதை மாத்திரைகள் இங்கு வருவது மட்டுமன்றி குதிரைக்கு உணவாக வழங்கப்படும் பழுதடைந்த கடலை, பருப்பு என பல்வேறுபட்ட உணவுப் பொருட்கள் பாகிஸ்தானிலிருந்து சட்டத்திற்கு புறம்பான விதத்தில் கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறானதோர் சூழ்நிலையில் கசினோ சூதாட்டம் சட்டமாக்கப்படுமானால் கொழும்பு நகரில் விபசாரம் தலைதூக்கும். போதைவஸ்து மட்டுமன்றி போதை மாத்திரை பாவனைகள் அதிகரிக்கும். அது மட்டுமன்றி ஆயுதக் கலாசாரமும் தலைதூக்கும்.
பாங்கொக் நகரைப் போன்று கொழும்பு நகர் பாகிஸ்தானிய போதைவஸ்து பாதாளக் குழுக்களின் கைகளின் நிர்வாகத்திற்கு சென்று விடும் ஆபத்து உள்ளது எனவும் நாட்டை சீரழிக்கும் கலாசாரத்தை பண்பாட்டை சீரழிக்கும் கசினோ சூதாட்டம் வேண்டாம். பௌத்த குரு ஒருவர் மட்டும் தீக்குளிப்பதால் இதனை தடுத்து விட முடியாது பலர் தீக்குளிக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment