ஒவ்வொரு இனங்களுக்கும் ஏற்றாற்போல் பொலிஸாரை நியமிக்க முடியாது! தேவையான தமிழ் பொலிஸார் சேவையில் உள்ளனர்!
நாட்டின் சகல மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு பொலிஸ் துறையின் கீழ் அனைத்து பொலிஸாரும் செயற்படுவதாகவும், ஒவ்வொரு இனங் களின் அவசியத்திற்கும் ஏற்றால் போல் இலங்கையினுள் பொலிஸாரை நியமிக்க முடியாது என பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோன் தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கான பொலிஸ் அதிகாரம் குறித்து, வடமாகாண சபையின் முதல் அமர்வு கைதடியில் உள்ள மாகாண சபைக் கட்டடத்தில் நடைபெற்றபோது வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரன் அவ்வாறு குறிப்பிடுவதற்கு முன்னதாகவே மொழிப் பிரச்சினை தொடர்பில் நாம் அறிந்து கொண்டு யாழ்ப்பாணத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் அவசியமான தமிழ்ப் பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பொலிஸ் நிலையத்தில் மூன்று, நான்கு தமிழ்ப் பொலிஸார் சேவையில் உள்ளதாகவும் பொலிஸில் தமிழ் தெரிந்தவர்களை அதிகமாக இணைத்துக் கொண்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
இதன்படி பொலிஸ் திணைக்களத்தின் நடவடிக்கைகளை இலகுபடுத்திக் கொள் வதற்காக 2,000 வரையான தமிழ் தெரிந்த பொலிஸார் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோன் மேலும் தெரிவித்தார்.
3 comments :
We defnitely need a better protection to our society.The protector may be a
tamil,singhlese,muslim or burgher,it doesn't matter.Protection is very important to have a peaceful society.
We need not to be isolted from other races.We need a peaceful living with multi cultural societies,just like the tamils live in around world,specially in european countries and countries like CDN,USA
Do not get caught to the magic shows of the tamil politicians.Because we swallowed number of worthless magic shows during the past
Post a Comment