றிஸானாவின் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூதூர் றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்காக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக சமூகம் மற்றும் இலங்கை இராணுவம் ஆகியன இணைந்து நிர்மாணித்த வீடு இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்த வீடு கையளிக்கும் நிகழ்வில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க, மேஜர் ஜெனரல் லால் பெரேரா, கேணல் விகும் லியனகே, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி ரி.என்.எல்.கருணாரத்ன, சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மெத கொட அபே திஸ்ஸ தேரர், வர்த்தக பொருளாதாரத துறைத் தலைவர் கலாநிதி அநுர குமார உதுமான்கே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
றிஸானா நபீக்கிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மிகவும் வறுமையில் வாழும் அவரது குடும்பத்தினருக்கு வீடொன்றை அமைத்துக் கொடுப்பதாக பலர் வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வளங்கினர் எனினும் எவரும் வீட்டை நிர்மாணித்துக்கொடுக்க முன்வராத நிலையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக சமூகம் மற்றும் இலங்கை இராணுவம் ஆகியன இணைந்து வீடொன்றை அமைத்துக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 comments :
இது ஒரு சிறந்த உதாரணம். நல்ல படிப்பு.
எதற்கும், எப்போதும் மதவாதம் பேசும் பெரியவர்கள் எல்லோரும் எங்கே? பள்ளிவாயல் உலாமாக்கள், முஸ்லிம் தலைவர்கள், அரசியல்வாதிகள் எல்லோரும் வெறும் சுயநலவாதிகள் என்பதை இதிலிருந்து அறியக்கூடியதாக, உணரக்கூடியதாக உள்ளது.
Already, Many Muslim politicians and others had visited to her place and promised to help her family to build a house.
Now Where are they?
Post a Comment