Saturday, October 26, 2013

வெலிகம அறபாவில் மாபெரும் கல்விக் கருத்தரங்கு

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. (சா.த) பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணாக்கரின் நலன்கருதி, வெலிகம பதுர் அமைப்பு மாபெரும் கல்விக் கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது. நாட்டின் பிரபல விரிவுரையாளர்கள் இந்தக் கருத்தரங்கை வெகுசிறப்பாக நடாத்தவுள்ளனர்.

வெலிகம அறபா மத்திய கல்லூரியின் வெபா மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கு வார இறுதி நாட்களில் நடைபெறவுள்ளது.

காலை 8.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறவுள்ள இக்கருத்தரங்கின் விரிவுரையாளர்கள் வருமாறு

நவம்பர் 02 - தமிழ் : M.H.M. ஜவுபர்,M.A (தமிழ்)PG Dip in ED. ((ஸரஸ்வதிதமிழ் மகாவித்தியாலயம் - லின்துல. / விரிவுரையாளர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி–கொட்டகல))

நவம்பர் 10 - விஞ்ஞானம்: S.D. ரவி ((sp in Science) Rajeswary institute - Colombo))

நவம்பர் 16 - இஸ்லாம்: – அல்ஹாஜ் மௌலவி இப்ழாள் ((IFLAL (BARI) (B.A. Hons) ஃ (Rt. I.S.A. Colombo District))

நவம்பர் 17 - ஆங்கிலம்: மஃமூன் ரகீம் (sp in English Trainer) / (Dip. in English)

நவம்பர் 23 - கணிதம்: அல்ஹாஜ் லிகாஉர் ரஹ்மான். (Maths – I.S.A. Matara District)

நவம்பர் 24 - வரலாறு: எம்.எஸ்.எம். பைஸர் (sp in History) / (I.S.A. Colombo District)

பாடசாலை மாணவர்கள் பாடசாலைச் சீருடையில் சமுகமளிப்பது கட்டாயம் எனவும் கையேட்டுக்காக ஒரு மாணவரிடமிருந்து ஒருநாளைக்கு ரூபா 100 அறவிடப்படும் எனவும் கருத்தரங்கு ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இக்கருத்தரங்கில் பாடப் பொறுப்பாசிரியர்களும் கலந்துகொள்ளலாம்.

(கலைமகன் பைரூஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com