Wednesday, October 30, 2013

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவதால் தமிழர்கள் எதிர்கொள்ளும் எப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்? ஜனாதிபதி

வடக்கிலிருந்து இராணுவத்தை வாபஸ் வாங்குவதால் தமிழர்கள் எதிர்கொள்ளும் எப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக் குமென ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் வடக்கின் இராணுவ முகாம்களை அகற்றுவது நடைமுறை சாத்தியமற்றதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அன்று தமது பெறுமதியான இளம் பராயத்தையும் நேரத்தையும் பயங்கரவாதத் திற்காக அர்ப்பணித்த பயங்கரவாத தலைவர்கள் தற்போது பிரிவினைவாதத்தை கைவிட்டு, அர்ப்பணிப்புடன் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டனர். வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் தற்போது அபிவிருத்திகள் பரவலாக இடம்பெறுகின்றன.

பயங்கரவாதம் பொதுவாக உருவாகுவதற்கு வழி வகுத்த விடயங்களை இல்லாமல் செய்வதற்காகவே இவ்அபிவிருத்தி திட்டங்களை நாங்கள் முன்னெடுக்கின்றோம். நாட்டின் பாதுகாப்பிற்காக பாடுபடும் முப்படைகள் இதில் பங்கெடுப்பதற்கு உரிமை யுள்ளது. அவ்வாறு பங்களிப்பும் வழங்கப்பட்டது. பயங்கரவாதிகளால் இரவில் நாம் படுகுழயில் தள்ளப்பட்டோம். வெளிச்சத்தின் போதும் அவ்வாறான படுகுழியில் விழ கூடாது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முப்படைகளை வடக்கிலிருந்து வெளியேற்றுமாறு எமக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகின்றன. தற்போது நாடு முழுவதும் இராணுவ முகாம்கள் உள்ளன. இராணுவத்தை வடக்கிலிருந்து அகற்றுவதால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் எவ்வகையான பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்? எனும் கேள்வி எழுப்பும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு பாதுகாப்பு தரப்பின் பங்களிப்பு அவசியம். ஆகவே வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றும் ஆலோசனை நடைமுறை சாத்திய மற்றது. அவ்வாறு அகற்றப்படவும் மாட்டாதென்பதை நாங்கள் தொடர்ந்தும் கூறி வருகின்றோம். பயங்கரவாதத்தை உலகிலிருந்து அழிப்பது தொடர்பான பாடத்தை இலங்கையே புகட்டியது. அந்த அறிவை நாம் ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் 23 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இவ்விழா நடை பெற்றது. பிரதமர் டி.எம்.ஜயரட்ன, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

முப்படை தளபதிகள், முன்னாள் பொலிஸ்மா அதிபர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ரொஹான் தழுவத்த, உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் ஆகியோர் இவ்வைபவத்தில் பங்கேற்ற ஏனைய அதிதிகளாவர். பல்வேறு துறைகளில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய பட்டதாரிகள் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

1 comments :

Anonymous ,  October 31, 2013 at 11:29 AM  

absolutely correct. ltte supporter never realized it.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com