சமுர்த்தி உற்பத்தி வர்த்தக கண்காட்சியும் விற்பனையும்
இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் 2013ம் வருடத் துக்கான அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களுக்கான சமுர்த்தி உற்பத்தி வர்த்தக கண்காட்சியும் விற்பனையும் 26ம் திகதி காலை 8.30 வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இக்கண்காட்சியும் விற்பனையும் இன்று மாலை வரைக்கும் சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பீ.எம்.ஹூசைன் ஆகியோர்களது மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற இவ் வர்த்தக கண்காட்சியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் யூ.பி.எஸ்.அனுருத்த பியதாச, அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றாசீக், அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் ஐ.எம்.ஹூசைன்;, உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்பதிகாரி ஏ.பி.தாவூத், பிரதேச செயலாளர்களான எம்.எம்.நஸீர், எம்.ஐ.எம்.தௌபீக் உட்பட சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்கள், முகாரமைத்துவப் பணிப்பாளர்கள், கணக்காய்வு உத்தியோகத்தர்கள், புலனாய்வு உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திணைக்களங்களின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வர்த்தக கண்காட்சியில் சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு, திரிய பியச வீட்டுக் காசோலைகள் வழங்கல், சிப்தொற புலமைப்பரிசில் வழங்கல், கடந்த வருட வர்த்தக கண்காட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தின் பொத்தவில் தொடக்கம் நாவிதன்வெளி பிரதேசம் வரைக்குமான 13 பிரதேச செயலகங்களிலிருந்தும் 26 சமுர்த்தி வங்கிகளின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன்; விற்பனையும் இடம் பெறுகின்றன.
(யு.எம்.இஸ்ஹாக்)
0 comments :
Post a Comment