கொழும்பில் உருவாக்கப்படவுள்ள 4000 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியிலான உயர்தரமான கேளிக்கை விடுதியான 'கிறௌண் கேளிக்கை விடுதி' இன் விளம்பரத் தூதுவராகவே அவுஸ்திரேலிய கிரிக்கற் அணி யின் தலைவர் மைக்கல் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் பக்கர் என்ற தொழிலதிபர் 450 அறைகள் கொண்ட மிகப்பெரும் கேளி க்கை விடுதியொன்றை கொழும்பில் அமைப்பதற்கான முடிவு விரைவில் எடுக்கப் பட்டவுள்ளது.
இலங்கையில் தனக்கு அதிகமான நண்பர்கள் உண்டு என்றும்இ இலங்கையர்கள் சிறப்பான விருந்தோம்பல் தொழில்துறை ஒன்றைப் பெறுவதற்கான வாய்ப்பு க்களை ஏற்படுத்த பங்களிப்பு செய்ய விரும்புவதாகவும் வீடியோ காட்சியொன்றில் கிளார்க் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கேளிக்கை விடுதியை அமைப்பது தொடர்பான முடிவை இலங்கை பாராளுமன்றம் எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கவிருக்கிறது. கிரிக்கட்டும் கசினோவும் ஒன்றுதான் என்று இப்போதாவது தெரிந்தால் நல்லது.
No comments:
Post a Comment