Wednesday, October 23, 2013

தேசிய பாதுகாப்புடன் நேரடியாகத் தொடர்புபடும் கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க முடியாது! நிமல்

தேசிய பாதுகாப்பில் நேரடியாகத் தொடர்புபடும் கேள்விக ளுக்கு பதில் கொடுக்கும் உரிமை அரசாங்கத்திற்கே உள்ள தென சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நேற்று ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக் கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

ரவி கருணாநாயக்க எம்.பி. தமது கேள்வியின்போது வரவு செலவுத் திட்டத்தில் ஆயுதங்களுக்கும் வெடி மருந்துகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியின் தொகை தொடர்பில் கேள்வி எழுப்பியதுடன், செலவிடப்பட்ட செலவினத் தலைப்புகள் குறித்தும் வினவினார். இக்கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ரவி கருணாநாயக்க எம்.பி.யின் கேள்வி தேசிய பாதுகாப்பில் நேரடியாகத் தொடர்புபடுவதால் அந்த கேள்விக்குப் பதிலளிக்க முடியாது. பாதுகாப்பு அமைச்சின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பலமுறை பதிலளித்துள்ளோம். இன்று ரவி கருணாநாயக்க எம்.பி. எழுப்பும் கேள்வி ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் சம்பந்தப்பட்டதாகும். அதனால் தேசிய பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அதற்குப் பதிலளிப்பதைத் தவிர்த்துக் கொள்கிறோம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. ஆகியோர் விடயங்களைத் தெரிவித்து பதில் வழங்கக் கோரி, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இக்கேள்விக்குப் பதிலளிக்கவில்லை என்பதுடன், அதற்கான காரணத்தையும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அரசாங்கம் 900 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தது. எனினும் 2011ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மேலும் 400 மில்லியன் ரூபா மேலதிகமாக திறைசேரி மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திலும் 900 மில்லியன் ரூபா நிதிக்கு மேலதிகமாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான நிவாரணங்களை வழங்க மேலும் 400 மில்லியன் ரூபா நிதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com