புதிய பாப்பரசரின் தெரிவை இரகசியமாக கண்காணித் ததாக, அமெரிக்கா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் புதிய பாப்பரசரை தேர்ந் தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த கர்தினால்கள் கலந்து கொண்டனர்.
ரோமில் உள்ள புனித பீட்டர்ஸ்பேர்க் தேவாலயத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன்போது கர்தினால்கள் அனுப்பிய மின்னஞ்சல் தகவல்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்களை அமெரிக்கா அவதானித்ததாக, இத்தாலியில் வெளியாகும் பெனாரோமா சஞ்சிகை தெரிவித்துள்ளது.
சி.ஐ.ஏ முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டன் வழங்கிய தகவல்களை ஆதாரமாக வைத்து, பெனரோமோ சஞ்சிகை, இவ்விபரங்களை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்கா, சர்வதேச மக்களின் சமய உரிமைகளைக்கூட, மீறியுள் ளதாக, அச்சஞ்சிகை குற்றம் சாட்டியுள்ளது.
No comments:
Post a Comment