சிரானி பண்டாரநாயக்கா தொடர்பில் வெளிநாட்டு அமைப்புகள் முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு!
பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியப்பிரேரணைத் தொடர்பிலான விசேட மேன்முறையீட்டு மனு குறித்த விசாரணையில் பங்கேற்க, இரண்டு வெளிநாட்டு அமைப் புகள் முன்வைத்திருந்த கோரிக்கையை இன்று உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிராக பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்வைத்த குற்றச்சாட்டுகளை, மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாக ரத்து செய்திருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி, சட்ட மா அதிபர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், குறித்த மனு விசாரணையில் தாங்களும் பங்குபற்ற அனுமதிக் குமாறு, பொதுநலவாய நாடுகளின் சட்டத்தரணிகள் சங்கமும், இங்கிலாந்து வேல்ஸ் மனித உரிமைகள் குழுவும், உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத் திருந்தன.
இந்த கோரிக்கை உயர் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டது. இதனை பரிசீலித்த ஐந்து பேர் கொண்ட நீதியரசர் குழாம், உள்நாட்டில் விசாரணையில் உள்ள வழக்கு ஒன்றில், வெளிநாட்டு அமைப்புகளுக்கு உரிமை இல்லை என்று தெரிவித்து, கோரிக்கையை நிராகரித்து.
0 comments :
Post a Comment