இரட்டைக் கொலை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களுக்கு மரண தண்டனை!
இரட்டைக் கொலை சம்பவமொன்றில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள இருவருக்கு மொனராகலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித் துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர் களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை, கல்பெத்த பகுதியைச் சேர்ந்த இருவருக்கே கொலைக் குற்றச் சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1997ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம ஆயித்தியமலை பகுதியில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டும் கூரான ஆயுதத்தால் குத்தியும் இருவரை கொலை செய்ததாக இந்த இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.
நீண்ட கால வழக்கு விசாரணையின் பின் இன்று இரு சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் எச். குலதுங்க மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
0 comments :
Post a Comment